கொலை வழக்கில் ஜோ பைடன் தனது வார்த்தைக்கு மன்னிப்பு கேட்கவில்லை – சர்ச்சைக்கு வெள்ளை மளிகை விளக்கம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது உரையின்போது, சட்டவிரோதம் வார்த்தையை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்று வெள்ளை மளிகை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதம்
சனிக்கிழமையன்று State of Union உரையின்போது, லேகன் ரிலேயை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை குறிப்பிடும்போது ”சட்டவிரோதம்” என்ற வார்த்தையை ஜானதிபதி ஜோ பைடன் பயன்படுத்தினார்.
அதற்காக அவர் மன்னிப்பு கேட்டதாக கூறப்பட்டது சர்ச்சையானது. இதற்கு டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்ததுடன், பைடன் தனது ‘மன்னிப்பு’ வார்த்தை உபயோகத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
வேறு வார்த்தை
இந்த நிலையில், வெள்ளை மளிகை தற்போது ஜோ பைடன் மன்னிப்பு கேட்கவில்லை என தெரிவித்துள்ளது. ஜோ பைடன் MSNBC நேர்காணலில் தனது கருத்தை தெரிவிக்கும்போது வேறு வார்த்தையைப் பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் துணை பத்திரிகை செயலாளர் ஒலிவியா டால்டன் கூறுகையில், ‘முதலில் நான் ஒன்றைப் பற்றி தெளிவு செய்ய விரும்புகிறேன். ஜனாதிபதி முற்றிலும் மன்னிப்பு கேட்கவில்லை.
அந்த உரையாடலில் எங்கும் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் மன்னிப்பு கேட்கவில்லை; வேறு வார்த்தையை பயன்படுத்தினார்’ என தெரிவித்துள்ளார்.