இதை மட்டும் எக்ஸ்ட்ரா சேர்த்துக்கோங்க; ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெடி
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 1/4 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
சின்ன வெங்காயம் – 10
உருளைக் கிழங்கு – 1
தக்காளி – 2
கத்தரிக்காய் – 1
கேரட் – 1
புளி – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
சாம்பார் பொடி – 1 டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/2 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 8
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் புளியை சேர்த்து ஊறவைத்து கரைத்து வைக்கவும். புளி கரைசல் செய்யவும். அடுத்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து துவரம் பருப்பு, பாசிப்பருப்பு,ஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டுச் சூடானதும் தாளிக்க எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளித்து கொள்ளவும். பின்னர் தாளிப்புடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம் வதக்கியதும் தக்காளி, நீளவாக்கில் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து சாம்பார் தூள், கேரட், கத்தரிக்காய், உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். இப்போது அதில்
கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய்கறிகள் நன்கு வெந்ததும் வேகவைத்து எடுத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும். கடைசியாக இறக்கும் முன் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான, அருமையான கம கம இட்லி சாம்பார் ரெடி.