பலவீனமான எலும்புகள் இரும்பு போல் வலுவடைய இதை மட்டும் செய்யுங்கள்
பல நேரங்களில், ஊட்டச்சத்து குறைபாடு, வாழ்க்கை முறை மாற்றம் அல்லது தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களின் காரணமாக, எலும்புகள் பலவீனமய தொடங்குகின்றன, இதன் காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு ஆபத்து ஏற்படத் தொடங்கிவிடுகிறது.
ஆனால் இனி நீங்கள் பீதி அடைய தேவையில்லை.. வயது ஏற ஏற வலுவிழக்கும் எலும்புகளை வலுப்படுத்த முடியும். இதற்கு நீங்கள் சில எளிய மாற்றங்களை செய்தால் போதும். அதிலும் சில முக்கியமான பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம், உங்கள் எலும்புகளை எளிதாக நீங்கள் வலுவாக வைத்திருக்க முடியும். எனவே 30 வயதிற்குப் பிறகு உங்களின் எலும்புகளை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று இப்போது தெரிந்துக்கொள்வோம்.
கால்சியம் மற்றும் வைட்டமின் டி:
எலும்பு உருவாவதற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு நீங்கள் தினமும் குறைந்தபட்சம் 1000 மி.கி கால்சியம் மற்றும் 600-800 யூனிட் வைட்டமின் டி எடுத்துக்கொள்வது அவசியமாகும். அதன்படி
மற்றும் கால்சியம் நிரந்த பால், தயிர், பாலாடைக்கட்டி, பச்சை காய்கறிகள், சோயாபீன் மற்றும் பாதாம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் சூரிய ஒளியில் உடலை வெளிப்படுதல் மற்றும் முட்டை, காளான்கள் போன்ற உணவுகள் சாப்பிடுவதும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.
உடல் செயல்பாடு அதிகரிக்கும்:
தசைகளைப் போலவே, நமது எலும்புகளும் தொடர்ந்து நாம் செய்யும் சில உழைப்பால் வலுவடையும். எனவே இதற்கு வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமாகும். முக்கியமாக விறுவிறுப்பான நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது யோகா போன்ற உடற்பயிற்சிகளை வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களாவது செய்வது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.