குளிர்காலத்தில் கூலா எடை இழக்க இந்த ஹாட் பானங்கள் குடிச்சா போதும்

அதேபோல் அதிக உடல் செயல்பாடு இல்லாததாலும், இந்த பருவ நிலையில் அதிக பசி எடுக்கும் என்பதாலும், குளிர் காலத்தில் தொப்பையில் சேரும் கொழுப்பும் அதிகமாக உள்ளது. ஆகையால் குளிர் காலத்தில் எடையை குறைப்பது மிக கடினமான ஒரு சவாலாகவே உள்ளது.
குளிர்காலத்தில் எடை இழப்பு (Weight Loss in Winters)
குளிர் காலத்தில் எடையை குறைப்பது கடினம் என்றாலும், சில குறிப்பிட உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் அதை செய்யலாம். வழக்கமாக இந்த பருவ நிலையில் நாம் விரும்பி உட்கொள்ளும் சில உணவுகளை கொண்டே நமது தொப்பை கொழுப்பையும் (Belly Fat) உடல் எடையையும் குறைக்கலாம். குறிப்பாக சில சூடான பானங்கள் (Hot Drinks) இந்த மியற்சியில் மிக உதவியாக இருக்கும். இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். பொதுவாக குளிர்காலத்தில் இது மந்தமாகிவிடுகிறது. இந்த பானங்கள் அதிக கலோரிகளை எரிக்க உதவுகின்றன.
குளிர்காலத்தில் தொப்பை கொழுப்பை எரிக்க உதவும் 5 சூடான பானங்கள் பற்றி இங்கே காணலாம்
கிரீன் டீ:
இது அனைவருக்கும் தெரிந்த ஒரு பானம். க்ரீன் டீயில் (Green Tea) ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நச்சுகளை வெளியேற்றவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மெலும் இது ஆரோக்கியமற்ற உணவு பசியைக் குறைக்கிறது.
ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் வெதுவெதுப்பான நீர்:
அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் (Apple Cider Vinegar) குடிப்பதும் உங்கள் நாளைத் தொடங்க ஆரோக்கியமான வழியாகும். இது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது.
மஞ்சள் பால்:
இது பல நாட்களாக பயன்படுத்தப்படும் பழமையான எடை இழப்பு (Weight Loss) வகைகளில் ஒன்றாகும். மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக ஏற்றது. இதில் குர்குமின் உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு உதவும். மஞ்சள் பால் (Turmeric Milk) எடை இழப்பை ஊக்குவிக்கிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.