கிளாம்பாக்கத்துக்குள் “நுழைஞ்சதுமே”.. படக்னு காலில் விழுந்து கெஞ்சி.. யார் தெரியுமா? பதறிய சிவசங்கர்

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் நுழைந்ததுமே, அமைச்சரின் காலில் 300-க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் காலில் விழுந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

என்ன நடந்தது கிளாம்பாக்கத்தில்?

புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில், முழுமையான வசதிகள் இன்னும் அமைக்கப்படவில்லை என்ற புகார்கள் கிளம்பி உள்ளன.. எனவே, அடிப்படையான சில வசதிகளையும் செய்துதர வேண்டும் என்பதுடன், இணைப்பு போக்குவரத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பயணிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கிளாம்பாக்கம்: அதேபோல, கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனை உடனடியாக திறக்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இந்த பணிகள் அனைத்தையும் தமிழக அரசு கையில் எடுத்துள்ளதால், கிளாம்பாக்கம் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த பஸ் ஸ்டாண்டில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீரென ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.. அதாவது, தாங்கள் பணிபுரிய இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தாங்கள் பணிபுரிய இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்” என்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் தமிழக அரசிடம் மனு தந்துள்ளார்கள்.

நடைபாதை வியாபாரிகள்: இப்படிப்பட்ட சூழலில், நடைபாதை வியாபாரிகளும் புதிய கோரிக்கையை விடுத்துள்ளனர். அனுமதிக்கக்கோரி திரளான பெண்கள் அமைச்சர் சிவங்கர் காலில் விழுந்து கெஞ்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பார்வையிட வந்தார். அப்போது, அங்கு பெண்கள் சிலர் திரண்டு வந்தனர்.. அமைச்சரை பார்த்ததுமே, அவரின் காலில் திடீரென விழுந்து, தங்கள் வாழ்வாதாரத்தை காக்க நீங்கள்தான் உதவ வேண்டும் என்று கெஞ்சினார்கள்..

பதறிய அமைச்சர்: இதனால் பதறிப்போன அமைச்சர், அவர்களது குறைகள் என்னவென்று கேட்டார்.. அப்போதுதான் தெரிந்தது இந்த பெண்கள் அனைவரும் தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள நடைபாதை வியாபாரிகள் என்பது.. பஸ் ஸ்டாண்டிலேயே பழம், வாட்டர் பாட்டில் போன்றவற்றை விற்பனை செய்து வருபவர்கள்.. ஆனால், பஸ்கள், அங்கிருந்து பெருங்களத்தூருக்கு மாற்றப்பட்டதால், இவர்களும் அங்கு வந்து வியாபாரம் செய்து வந்திருக்கிறார்கள்..

இந்நிலையில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இந்த நடைபாதை வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு அருகே தங்களை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு, அந்த பெண்கள் அமைச்சரிடம் முறையிட்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *