டெபிட் கார்டு வைத்திருந்தா போதும்.. இலவச விபத்து காப்பீடு கிடைக்கும்..!!

வங்கிகள் நமக்கு வழங்க கூடிய டெபிட் கார்டுகளில் பல்வேறு பலன்களையும் அளிக்கின்றன. ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலானவர்கள் அதனை பயன்படுத்துவதில்லை.

குறிப்பாக எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, டிபிஎஸ், கோடக் மகேந்திரா போன்ற வங்கிகள் தங்களின் டெபிட் கார்டுகளுடன் இலவசமாக விபத்து காப்பீடுகளை (accidental insurance) வழங்குகின்றன. இதற்கு நாம் ப்ரீமியம் செலுத்த வேண்டியதில்லை.

டெபிட் கார்டில் இலவச காப்பீடா?: பல்வேறு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெபிட் கார்டுகளுடன் குறிப்பிட்ட நிபந்தனைகளோடு இலவச விபத்து காப்பீட்டினை வழங்குகின்றன. கார்டை பயன்படுத்தாமலேயே காப்பீடு கோர முடியாது. ‘

குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த டெபிட் கார்டை பயன்படுத்தி குறிப்பிட்ட அளவு பணம் பரிமாற்றம் செய்திருந்தால் இலவச காப்பீடு நிச்சயம் கிடைக்கும்.

வங்கிகள் விதிக்கும் நிபந்தனைகள் என்ன?: உதாரணமாக ஹெச்டிஎஃப்சி வங்கி மில்லினியா டெபிட் கார்டில், உள்நாட்டில் நிகழும் விபத்துக்கு 5 லட்சம் (விமானம், ரயில், சாலை விபத்து) வரையும் வெளிநாட்டில் விமான விபத்தில் இறந்தால் 1 கோடி வரையும் காப்பீடு கிடைக்கும்.

இதற்கு அந்த டெபிட் கார்டை கடந்த 30 நாட்களில் ஒரு முறையாவது பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் வங்கிகளுக்கு வங்கி மாறுபடுகின்றன.

உதாரணமாக கோடக் மகேந்திரா வங்கி கிளாசிக் டெபிட் கார்டில் கடந்த 30 நாட்களில் குறைந்தது ரூ.500க்கு இரண்டு பரிமாற்றம் நடந்திருந்தால் இலவச விபத்து காப்பீடு கிடைக்கும். டிபிஎஸ் வங்கியில் கடந்த 90 நாட்களில் ஒரு பரிமாற்றம் செய்திருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

எந்த வகை பணப் பரிமாற்றங்களுக்கு அனுமதி:

யுபிஐ பணப் பரிமாற்றங்கள் இதில் தகுதி பெறாது பாயிண்ட் ஆஃப் சேல் எனப்படும் கார்டினை ஸ்வைப் செய்து பரிமாற்றம் செய்தால் தகுதியுண்டு ஈ காமர்ஸ் தளங்களில் ஆன்லைன் பரிமாற்றம் செய்திருந்தால் தகுதியுண்டு

என்னென்ன ஆவணங்களை கொண்டு காப்பீடு கோரலாம்:

குறிப்பிட்ட டெபிட் கார்டுக்கு விபத்து காப்பீடு உண்டா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். அந்த டெபிட் கார்டு உரிமையாளர் விபத்தில் இறந்துவிட்டார் எனில், குடும்பத்தினர் வங்கிக்கு சென்று காப்பீடு தொகை கோர இயலும். இதற்கு ,

நாமினியின் விவரங்கள்(பெயர், தொலைபேசி எண். முகவரி)

காப்பீடு தொகை கோருவதற்கான விண்ணப்பம்

இறப்பு சான்றிதழ்

உடற்கூராய்வு அறிக்கை

விபத்து இறப்பு தொடர்பான முதல் தகவல் அறிக்கை

டெபிட் கார்டு விவரம்

ஊடகங்களில் வெளியான செய்தி

மருத்துவமனையில் இறந்திருந்தால் மருத்துவமனை அறிக்கை

நாமினி விவரம் இல்லையெனில் வாரிசு சான்றிதழ்

ஆகியவற்றை சமர்ப்பித்து விபத்து காப்பீடு தொகையை கோரலாம். உடனே உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு உங்கள் டெபிட் கார்டுக்கு விபத்து காப்பீடு உண்டா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *