#JUST IN : இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பிரபல நடிகை ..!
பாஜகவில் இருந்தவர் காயத்ரி ரகுராம். தமிழக பாஜக நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராகும். சொந்தக் கட்சி நிர்வாகிகள் குறித்தே விமர்சனம் செய்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.. இதையடுத்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த காயத்ரி ரகுராம், தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக விமர்சித்து வருகிறார் காயத்ரி ரகுராம்.
அண்ணாமலையை அவ்வப்போது வெளுத்து வாங்குகிறார். இது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இடைவெளிதான். நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். பெண்களுக்கு எந்த கட்சியில் மரியாதை இருக்கிறதோ அந்த கட்சியில் இணைந்து செயல்படுவேன் என்றார்.
அவர் விசிக அல்லது திமுகவில் இணையவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.