வெறும் ரூ.9000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கலாம்!
பலரும் குறைந்த முதலீடில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அப்படி என்ன தொழில் செய்யலாம் என யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.
தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பனை மரம் ஏறி கல் எடுத்தும், நுங்கு பிடுங்கியும் பிழைப்பு நடத்தி வருகிறார். பலரும் மரம் ஏறுவதற்கு பயப்படுவார்கள். பலர் அதில் வழுக்கி விழுந்து உயிரிழக்கின்றனர். இதனால் மரம் ஏறும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இவருக்கே ஒரு முறை மரத்தில் உள்ள முள் குத்தி காலில் செப்டிக் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலையில் முடக்கம் ஏற்பட்டதால், கவலையுற்ற இவருக்கு ஆறுதலாக ஒரு மெஷின் வந்தது. யூடியூப்பில் பார்த்து வாங்கிய இந்த மெஷின் மரம் ஏறுவதற்கு உதவியாக இருக்கும்.
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மழை காலங்களில் கூட நீங்கள் எளிதாக பனை மரத்தில் ஏறி சம்பாதிக்கலாம். இந்த மெஷினின் விலை வெறும் ரூ.9000 என்றும் இதன் மூலம் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் அவர் கூறினார். இன்னும் பயிற்சி பெற்று பொறுமையாக செய்தால் மேலும் சம்பாதிக்கலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். இந்த மெஷினை அவர் கோயம்புத்தூரில் இருந்து வாங்கியதாகவும் கூறியுள்ளார். இந்த மெஷின் மூலம் ஆண், பெண், மாணவர்கள் என யாராலும் மரம் ஏற முடியும்.