பார்க்க தான் அளவில் சிறியது!! கியாவின் அடுத்த தரமான தயாரிப்பு – 2024 சொனெட் தமிழ் டெஸ்ட் டிரைவ் ரிவியூ!
கியா (Kia) நிறுவனம் அதன் புதிய சொனெட் எஸ்யூவி காரை ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் உடன் ஜனவரி 12ஆம் தேதி இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யவுள்ளது. மேலும், அன்றைய தினத்தில்தான் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கு முன்பாகவே, புதிய சொனெட் காருக்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ளன.
விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.25,000 என்கிற டோக்கன் தொகையை செலுத்தி புதிய சொனெட் காரை புக் செய்துக் கொள்ளலாம். இந்த நிலையில், 2024 கியா சொனெட் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. நாங்கள் ஓட்டி பார்த்ததில், இந்த கார் எப்படி உள்ளது? புதிய சொனெட்டின் நிறை & குறைகள் என்னென்ன என்பதை தமிழில் ரிவியூ வீடியோவாக வழங்கியுள்ளோம். அதனை கீழே காணலாம்.
புதிய சொனெட் காரின் வெளிப்பக்க மற்றும் உட்பக்க தோற்றங்கள் மாற்றப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் என்பதால், குறிப்பாக காரின் முன்பகுதி ஆனது பெரிய அளவில் மாற்றங்களை கண்டுள்ளது. காரின் ‘புலி மூக்கு’ வடிவிலான முன்பக்க கிரில் அளவில் பெரியதாக்கப்பட்டு உள்ளது. ஹெட்லைட்களை சுற்றி, புதுமையான டிசைனில் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் காரின் பின்பக்கத்தின் தோற்றத்திலும் முக்கியமான மாற்றங்கள் நிறைய வழங்கப்பட்டுள்ளன. காருக்கு உள்ளே, ஸ்டேரிங் சக்கரத்துக்கு பின்னால் புதிய 10.25-இன்ச் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்ஃபோடெயின்மெண்ட் திரையின் அளவும் 10.25 இன்ச் ஆக உள்ளது. மற்றப்படி, என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. டீசல் என்ஜினை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இனி பெறலாம்.