ஜஸ்ட் மிஸ்ஸான சதம்.. டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்பிய ரிங்கு சிங்.. ஒற்றை ஆளாக சம்பவம்!
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஆனால் ஒரேயொரு வீரர் மட்டும் இடம்பெறுவது நிச்சயம் என்று அனைத்து தரப்பிலும் சொல்லப்படுகிறது.
அவர் தான் மிடில் ஆர்டரில் வெளுத்து வாங்கி வரும் ரிங்கு சிங். இதுவரை இந்திய அணிக்காக 8 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 268 ரன்களை விளாசியுள்ளார். மிடில் ஆர்டர் மற்றும் ஃபினிஷிங்கில் இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனாக ரிங்கு சிங் வளர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆட்டத்தை போக்கை எந்த சூழலிலும் மாற்றும் திறமை ரிங்கு சிங்கிடம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அண்மையில் தென்னாப்பிரிக்காவில் ஆடிய டி20 போட்டியில் கூட கடைசி போட்டியில் இந்திய அணி வென்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதன்பின் இந்திய ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டது பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை அளித்தது. அவரின் பேட்டிங்கில் டெக்னிக்கலாக எந்த பிரச்சனை இல்லாததும், குறைந்தபட்ச ரிஸ்க் மூலமாக ரன்கள் சேர்ப்பதும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ரிங்கு சிங்கின் கவனம் டெஸ்ட் கிரிக்கெட் பக்கமும் திரும்பியுள்ளது. ரஞ்சி டிராபி தொடரில் உத்தரப் பிரதேச அணிக்காக களமிறங்கி விளையாடி வருகிறார் ரிங்கு சிங். கேரளா அணிக்கு எதிரான போட்டியில் உத்தரப் பிரதேச அணி விளையாடிய போது 124 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.