சரும பொலிவை அதிகரிக்க இந்த ஒரே ஒரு பழ பேஸ்பேக் போதும்: இப்படி பயன்படுத்துங்க
பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சருமம் பொலிவாக இருக்கவும் பெரிதளவில் உதவுகிறது.
முகத்தில் படியும் அழுக்குகள் மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை அகற்றும்.
மேலும் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமம் மென்மையாக மற்றும் பொலிவாக இருக்க உதவுகிறது.
முகத்தை மென்மையாக்கவும், பளபளப்பாக்கவும், பப்பாளி பேஸ்பேக்கை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
1. முகப்பருக்கு பப்பாளி
முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயை நறுக்கி அதன் உட்புற துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்த்து வரவேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, முகத்தின் பொலிவை கூட்டும்.
2. சருமம் மிளிர பப்பாளி
முதலில் பப்பாளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து அதில் தேன் அல்லது பால் சேர்த்து பசை போல் நன்கு குழைத்துக்கொள்ள வேண்டும்.
இதை தொடர்ந்து முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.
3. முகம் பிரகாசிக்க பப்பாளி
நன்கு பழுத்த பப்பாளி பழத்தை எடுத்து அதனுடன் 4 ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு கிளிசரின் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை கண்ணை சுற்றி படாமல், முகம் முழுக்க தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர, முகம் பிரகாசிக்கும்.
4. மென்மையான முகத்திற்கு பப்பாளி
பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வேகவைத்து, பின் தோலை தனியாக எடுத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த கலவையை தொடர்ந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் சுத்தம் செய்து வர முகம் மென்மையாக மாறிவிடும்.
5. முகம் மினுமினுக்க பப்பாளி
ஒரு கப் பப்பாளி துண்டுகளுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
இந்த சாலட்டை ஒரு மாதத்திற்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுப்பாக இருக்கும்.
6. முகத்தில் வளரும் முடியை தடுக்க பப்பாளி
பப்பாளி பழத்தை நன்கு கூழாக்கி அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து முகத்தில் தடவி வர வேண்டும்.
இந்த கலவை நன்றாக உலர்ந்த பின்பு முகத்தை கழுவி வந்தால் நாளைடைவில் முகத்தில் முடிகள் வளர்வது தடுக்கப்படும்.