இந்த அறிவிப்புக்காக தான் வெயிட்டிங்! எலெக்ட்ரிக் வாகனங்களின் சேல்ஸ் பிச்சுக்கப்போகுது!

பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. ஆட்டோமொபைல் செக்டாரில் ஏகப்பட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டும் நிலையில் நாளை வெளியாகியுள்ள பட்ஜெட் குறித்து மக்கள் மத்தியில் தற்போது என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. இதன்படி 2024-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு தேர்தல் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் ஏகப்பட்ட சலுகை அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியாக இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் செக்டாரில் என்னென்ன அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை தான் நாம் இங்கே காண போகிறோம். எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த பல்வேறு சலுகை அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை நேரம் மாற்று எரிசக்தி மூலம் இயங்கும் வாகனங்கள் மீதான சலுகையும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் மிக முக்கியமாக வளர்ந்து வரும் லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி துறையில் புதிய பாலிசிகளை கொண்டு வர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். லாஸ்ட் மெயில் கனெக்டிவிட்டி துறையை வளர்ப்பதற்கான பல்வேறு முக்கிய முயற்சி இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் மிக முக்கியமாக வளர்ந்து வரும் லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி துறையில் புதிய பாலிசிகளை கொண்டு வர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். லாஸ்ட் மெயில் கனெக்டிவிட்டி துறையை வளர்ப்பதற்கான பல்வேறு முக்கிய முயற்சி இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது இருக்கும் ஆட்டோமொபைல் துறை சம்பந்தமான மாற்றங்களில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆட்டோமொபைல் துறையின் அடிப்படையையே மாற்றும் சக்தி வாய்ந்தது என்பதால் இந்த மாற்றத்தை செய்ய மத்திய அரசு இந்த தருணத்தில் நினைக்காது. அதே நேரம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த மத்திய பட்ஜெட்டில் ஜாக்பாட் அறிவிப்புகள் வழியாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

மத்திய அரசு தற்போது பசுமை வாகன தயாரிப்புகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் ஃபேம் 3 மானியம் குறித்த அப்டேட் வழியாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படவும், லித்தியம் அயான் பேட்டரிகள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படவும் ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக நமக்கு தெரிகிறது.

தற்போது என்ட்ரி லெவல் கம்பஷங் இன்ஜின் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதைவிட குறைவாக 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கவும், அல்லது ஐந்து சதவீத ஜிஎஸ்டி விதிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இது மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகளுக்கான தயாரிப்பு ஆலையை கட்டமைக்க பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வருமான வரியில் இருந்து குறிப்பிட்ட தொகை குறைக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளன. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை அதிகமாகும் என்பதால் மத்திய அரசு இந்த திட்டத்தை கையில் எடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது மட்டுமல்லாமல் மாற்று எரிசக்தி கொண்ட வாகனங்களை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களும் அறிவிக்கப்படலாம்.

மத்திய அரசு இவ்வாறான அறிவிப்புகளை வெளியிடும் பட்சத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரிக்கும். குறிப்பாக மாத சம்பளம் வாங்கும் மக்கள் பலர் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்புவார்கள் அவர்களுக்கு வருமான வரி குறையும் என்பதால் அதன் காரணமாகவே புதிய வாகனங்களை வாங்கி பயன்படுத்த நினைப்பார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *