ஜோதிகா, அஜய் தேவ்கன் நடிப்பில் நடுங்க வைக்கும் சைத்தான் பட டீசர்!
அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் இணைந்து நடித்துள்ள பாலிவுட் படத்துக்கு ‘ஷைத்தான்’ (Shaitaan) என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ‘சூப்பர் 30’, ‘கானாபத்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கியுள்ளார். படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார். த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக வெளியான இப்படத்தின் போஸ்டர் பில்லி, சூனிய உருவ பொம்மைகளுடன் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகரிட்த்தது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.