வெறித்தனமாக ஓர்க் அவுட் செய்யும் ஜோதிகா: வைரலாகும் வீடியோ
நடிகை ஜோதிகா ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஜோதிகா வாலி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன் பின்னர் அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
தனது முதல் படத்திலேயே முதல் ‘அறிமுக நாயகி’ என விருதை பெற்ற ஜோதிகா குஷி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
நடிகர் சூர்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன், கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
திருமணம் முடிந்த சில ஆண்டுகள் குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜோதிகா, தற்போது சினிமாவில் கவனம் காட்டத் தொடங்கியுள்ளார்.
இவரது ரீ என்ட்ரி படங்கள் மாபெரும் வெற்றியை தேடிக்கொடுக்க, ரசிகர்களால் இன்றளவும் விரும்பப்படும் நாயகிகளின் பட்டியலிலும் உள்ளார்.
தற்போது கிட்டதட்ட 40 வயதாகும் நடிகை ஜோதிகா ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
https://twitter.com/DavidKottayam/status/1765012167651381395