சொத்து மதிப்பில் சூர்யாவை தட்டித் தூக்கிய ஜோதிகா? இருவரின் சொத்து மதிப்பு இதோ
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவின் சொத்து விபரம் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
சூர்யா மற்றும் ஜோதிகா
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம்வரும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் நடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்பு ஜோதிகா குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டு நடிப்பில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.
தற்போது ஜோதிகா தனது குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் சொத்து மதிப்பு
நடிகர் சூர்யா ஒரு படத்தில் 25 முதல் 30 கோடி சம்பளம் வாங்குவதாகவும், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டான 350 கோடியில் உருவாகும் கங்குவா திரைப்படத்தில் 30 கோடி சம்பளம் வெறுவதாகவும், இது மட்டுமில்லாமல் விளம்பர படத்தின் மூலமாகவும், சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாகவும் வருமானம் வருகின்றது.
மேலும் நடிகர் சூர்யாவிடம் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஆடி க்யூ7 கார், மெர்சிடிஸ் பென்ஸ், ஜாகுவார் என விதவிதமான கார்களும் இவற்றின் மதிப்புகள் கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. ஆக மொத்தம் சூர்யாவின் சொத்து மதிப்பு 206 கோடி என்பது தெரியவந்துள்ளது.
ஜோதிகாவின் சொத்து மதிப்பு
ஆனால் ஜோதிகாவின் சொத்து 331 கோடி என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், சூர்யாவை விட 125 கோடி ரூபாய் அதிகம் சொத்து வைத்துள்ளாரா என்று ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
மேலும் இந்த ஜோடிகள் மும்பையில் விலை உயர்ந்த கட்டிடம் ஒன்றை 70 கோடி ரூபாய் என்றும், சென்னையில் இருபதாயிரம் சதுர அடியில் சொந்தமாக விசாலமான கட்டிடம் உள்ளதுடன் இதன் விலை 100 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது.