கலையரசன் – சாண்டி மாஸ்டர் உட்பட 4 ஹீரோ.. 4 ஹீரோயின்கள் நடிப்பில் உருவாகும் ஹாட் ஸ்பாட்! ஃபர்ஸ்ட் லுக் வெளியானத
திட்டம் இரண்டு, அடியே ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்தியின் அடுத்து புதிய படம் ஹாட்ஸ்பாட்.
சமுதாயப் பிரச்சனையை அலசும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தை, கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில், கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து “ஹாட் ஸ்பாட்” படத்தை தயாரிக்கிறார்கள். மை சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் வெளியீடுகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் நடித்த அடியே ஆகிய வித்தியாசமான வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் அடுத்த படம் “ஹாட் ஸ்பாட்” இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். வரும் மார்ச் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது. சதீஷ் ரகுநாதன்- வான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார் முத்தையன் எடிட்டிங் பணியை மேற்கொண்டு இருக்கிறார்.
இதில் கலையரசன் கதாநாயகனாக ஆட்டோ ஓட்டுநராக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 96 மற்றும் அடியே பட கதாநாயகி கௌரி கிஷன் இளம் மனைவியாக வேடம் ஏற்றிருந்தார். அவரது கதாபாத்திரம் ஆண்கள் மனதில் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தும். மேலும் சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் , திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ் சோபியா ஆகியோர் அழுத்தமான வேடங்களில் நடிக்கிறார்கள்.