ஒரே ஒரு பாடலுக்காக களரி பயிற்சி.. அசத்திய நடிகை சாக்ஷி அகர்வால் – லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
பிரபல இயக்குனர் அட்லீயின் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் சாக்ஷி அகர்வால். அதன் பிறகு பல நல்ல திரைப்படங்களில் அவர் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் காலா, தல அஜித் குமார் அவர்களின் விசுவாசம் ஆகிய திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரம் அவர் ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மலையாள மொழியிலும் பல திரைப்படங்களில் சாக்ஷி நடிக்க துவங்கியுள்ளார்.
இந்நிலையில் மலையாள மொழியில் அவர் நடித்து வரும் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலுக்காக அவர் களரி பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக சில தகவல்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.