பாடாய் படுத்தும் களஸ்திர தோஷம்…. மாங்கல்ய தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகுதா?
இந்திய பாரம்பரிய ஜோதிட முறை, எதிர்காலத்தையும் கடந்த காலத்தில் நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றாற்போல, பலன்களை அளிப்பதாகக் கூறுகிறது. அதில், திருமணதை பாதிக்கும் தோஷங்கள் என்றால், அதில் தாரா தோஷம் முதலிடம் பெறுகிறது. ஒருவரின் பிறந்த நேரத்தின் அடிப்படையில் கணிக்கப்படும், ஜனன ஜாதகத்தின் அடிப்படையில் தார தோஷம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துக் கொள்ளலாம்.
தார தோஷம் ஒருபுறம் என்றால், இது தொடர்பாக மக்களுக்கு உள்ள பயம் மற்றும் கட்டுக்கதைகள் பெரிய கவலையை ஏற்படுத்துகின்றன. அது தவறான புரிதல்களையும் ஏற்படுத்துகிறது. அவற்றில் ஒன்று தான், மூல நட்சத்திர பெண்களை காட்டும் தயக்கமும் என்று புரிந்துக் கொள்ளலாம். இந்தக் கட்டுரையில் தார தோஷம் தொடர்பாக தெரிந்துக் கொள்வோம்.
தார தோஷம்
ஒருவருடைய ஜாதகத்தில் 8 மற்றும் ஒன்பதாம் இடம் வாழ்க்கை துணைக்கான தார ஸ்தானம் ஆகும். அந்த இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலோ அல்லது சுக்கிரனை பாவ கிரகங்கள் பார்த்துக் கொண்டிருந்தாலோ அந்த ஜாதகம் தார தோஷம் கொண்ட ஜாதகம் என்று அறியப்படுகிறது. இந்த தோஷமானது நாம் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளை கொண்டே இந்த ஜென்மத்தில் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
தார தோஷத்தின் பாதிப்பு
தார தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படும். திருமணமான பிறகும், தங்களின் துணையிடம் காரணமே இல்லாமல் கருத்து வேறுபடும் சண்டையும் இருக்கும். பொதுவாக திருமணமானவர்கள் பிரிந்து வாழ்வது மற்றும் விவாகரத்துக்கான காரணங்களும் தார தோஷம் என்று கூறப்படுகிறது.
களத்திர காரகர்
ஏழாவது வீடு என்பது களத்திர ஸ்தானம் ஆகும். குரு நேரடி பார்வையாக ஏழாவது வீட்டைப் பார்க்கும் பொழுது அது சுப பார்வையாக மாறி திருமணம் கைகூடும்.
இரு தார தோஷம் என்றால் என்ன?
ஒருவருக்கு ஒரு திருமணம் மட்டுமல்லாமல், மற்றொரு திருமணம் செய்யக் கூடிய நிலைக்கு இருதார யோகம் / தோஷம் என்று பெயர். ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும், ஏழாமிடமும் பலவீனமாகி 11ஆம் இடம் வலுத்தால் இரண்டு திருமணம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?
உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம். ஒருவருடைய லக்னத்தில் இருந்து எட்டாம் இடம் தான் மாங்கல்ய ஸ்தானம். இதில் சூரியன், செவ்வாய், சனி , ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல, அது மாங்கல்ய தோஷம் உள்ள ஜாதகம் என்று அறியப்படுகிறது.
களத்திர தோஷம் என்ன செய்யும்?
களத்திர தோஷம் ஏற்படுவதால் திருமணத் தடை ஏற்படும். திருமணம் நடைபெற்றாலும், குடும்பத்தில் ஒற்றுமை குறைவாக இருக்கும். நிம்மதியற்ற தாம்பத்ய வாழ்க்கைக்கு களத்திர தோஷம் காரணமாகிறது.