கம கமன்னு கருவேப்பிலை, மிளகு… வீட்டுல வெண் பொங்கல் இப்படி செய்து பாருங்க!
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை திருநாளில் முக்கியமானது பொங்கல் பண்டிகை. இந்த நாளில் அறுவடை செய்த புதிய அரிசியில் பொங்கல் வைத்து சூரியன், கால்நடை ஆகியவற்றிக்கு படைப்பது தமிழர்கன் பண்பாடு. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலின் முதல் நாளில் மக்கள் இந்திரனை (மழையின் கடவுள்) வணங்குகிறார்கள்.
திருவிழாவின் இரண்டாவது நாளில், சூரிய பகவானை வழிபடுவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. பொங்கலின் மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது, இது கால்நடைகளுக்கு சிறப்பிக்கப்படுகிறது. நான்காவது நாள் ‘காணும் பொங்கல்’, இதில் மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியான தருணங்களை பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள்.
அதேபோல் பொங்கல் தினத்தில் விதவிதமாக பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு படைப்பாளார்கள். அந்த வகையில் கருவேப்பிலை மிளகு பொங்கல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 2 கப்
பாசி பருப்பு – முக்கால் கப்
நெய் – 4 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் 3 டீஸ்பூன்
முந்திரி சிறிதளவு (தேவைப்பட்டால்)
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி (அதிகமாக இருந்தாலும் சரி)
இஞ்சி – ஒரு துண்டு
பெருங்காய தூள் – 4 சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் அரசிரியை நன்றாக கழுவி 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் அரிசி பாசி பருப்பு இரண்டையும் சேர்த்து 6 கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமாக தீயில் 40 நிமிடங்கள் வேக வைக்கவும். அதன்பிறகு பொங்கல் தயாராகிவிடும்.
அடுத்து ஒரு பானில் 4 டீஸ்பூன் நெய் விட்டு, அதில், மிளகு, இஞ்சியை சிறிது துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும். அடுத்து 1 டீஸ்பூன் சீரகம், 4 சிட்டிகை பெருங்காயத்தூள், முந்திரி இவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொண்டு, இறுதியாக கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். கருவேப்பிலை பொறிந்ததும் அப்படியே எடுத்து பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறவும். சுவையான கருவேப்பிலை மிளகு பொங்கல் தயார்.