கூட்டணியில் இணைய நிபந்தனை விதித்த கமல் ஹாசன்.., ஒத்துவராவிட்டால் தனித்து போட்டி

இந்த 2 நிபந்தனைக்கு ஒத்துப் போகிறவர்கள் கூட மட்டுமே கூட்டணியில் இணைவோம் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவிருப்பதால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றன. இதற்காக தேர்தல் பணிக்குழு, தொகுதி பொறுப்பாளர்கள் என பல்வேறு நிலைகளை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன.

அந்தவகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தலைமையில் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

2 நிபந்தனைகள்

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது 2 நிபந்தனைகளை மக்கள் நீதி மய்யம் கட்சி விதித்துள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், தமிழக மக்களின் நலனிலும் எந்த சமரசமும் அனுமதிக்கப்பட மாட்டாது. கமல்ஹாசனின் சிந்தனைகளோடும், கொள்கைகளோடும் ஒத்துப்போகிறவர்களுடன் மட்டுமே கூட்டணி.

இந்த இரண்டு நிபந்தனைக்கு ஒத்துப்போகாவிட்டால் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பணிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதோடு, பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *