‘கமல் ஹாசனின் டார்ச்சர் தாங்காமல் வெளிநாட்டுக்கு ஓடிய அபிராமி’.. பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்
சென்னை: கமல் ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்தவர் அபிராமி. அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக அபிராமியின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது.
படத்தை இப்போது பார்த்தாலும் அவரது நடிப்பை ஆச்சரியத்துடனேயே எல்லோரும் பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விருமாண்டி படத்துக்கு பிறகு பெரும் ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிராமி அதற்கு பிறகு காணாமல் போனார். இந்தச் சூழலில் அவர் பற்றி பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர்.
அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.