ரஜினியை விட கமல் உண்மையாவே Great.. 30 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தி பற்றி கமல் சொன்ன நச் பதில்..
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா ஜனவரி 22-ம் தேதி கோலாகலமாக நடந்தது. நாடு முழுவதிலுமிருந்து பல சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலர் இந்த பிரம்மாண்ட விழாவில் பங்கேற்றனர். மேலும் சில நடிகர்கள் ராமர் கோயிலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலும் சிலர் இந்தியா மதச்சார்பின்மை நாடு என்ற ரீதியிலும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் ராமர் கோயில் திறப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் “ நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே அது பற்றி பேசி உள்ளேன்.. அதே கருத்து தான் இப்பவும். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்தார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு கமல் அளித்த பேட்டி வைரல்:
இதனிடையே பாபர் மசூதி இடிக்கபப்ட்டது குறித்து 30 ஆண்டுகளுக்கு முன்பு கமல் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் நடிகர் கமல் தான். அப்போது டெல்லியில் இருந்த கமல், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்து தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். மேலும் ஒரு கோயிலை இடித்து மற்றொரு கோயில் கட்டுவது நியாயம் இல்லை.
ஒரு நடிகராக நான் இதை எல்லாம் பேசக்கூடாது என்கிறார்கள். ஆனால் நான் பேசுவேன். பாபர் மசூதி இடிக்கப்பட்டது எனக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. இவை எல்லாம் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி. யாரும் மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் தான் 30 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கமல் தெரிவித்துள்ளார். இந்த பழைய வீடியோ பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் ரஜினியை கமல் எவ்வளவு புரிதல் உள்ள மனிதர் என்று பதிவிட்டு வருகின்றனர்.