‘ஆளவந்தான்’ பட விஷயத்தில் கமலை திட்டிய தாணு! ஆனா நடந்த சம்பவமே வேற!.. இது தெரியாம போச்சே!..
Alavanthan Movie: 2001 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் உருவான திரைப்படம் ஆளவந்தான். கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே கமல். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த ஆளவந்தான் திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வெளியிட்டார்.
பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். கமலுக்கு ஜோடியாக ரவீனா டாண்ட்டன் நடிக்க உடன் மனிஷா கொய்ரலா உட்பட பல முக்கிய நடிகர்களும் நடித்திருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை.
தாணுவிற்கும் மிகுந்த நஷ்டத்தை பெற்றுத் தந்த படமாக ஆளவந்தான் திரைப்படம் அமைந்தது. இது ஆளவந்தான் இல்லை. என்னை அழிக்க வந்தான் என்று கலைப்புலி எஸ்.தாணுவே ஒரு மேடையில் கூறியிருப்பார். அதனாலேயே கமல் இந்தப் படத்திற்கு பிறகு தாணுவிடம் இணைந்து படம் பண்ணவில்லை.
கமல் மீதும் அவர் தொழில் பக்தி மீதும் இருந்த நம்பிக்கையால்தான் தாணு எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் உண்மையிலேயே என்ன நடந்தது என பிரபல சினிமா தயாரிப்பாளரான பி.எல். தேனப்பன் விளக்கமாக கூறினார்.
முதலில் சேரியை மையமாக வைத்துதான் ஆளவந்தான் படத்தை எடுக்க நினைத்தாராம் கமல். ஆனால் தாணுதான் ‘ நான் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர்? ஏ.எம். ரத்னம் மாதிரி டபுள் மடங்கு நான் இந்தியன் மாதிரி மடங்கு படத்தை எடுக்க முடியும்’ என கூறி அதிக பட்ஜெட்டில் படத்தை எடுக்க சொன்னாராம்.
தாணு கேட்டதன் பேரில் கமலும் படத்தை எடுக்க ஒரு கட்டத்தில் பணம் செலவாகிக் கொண்டே போனதாம். அதனால் தாணு எடுத்த வரைக்கும் போதும். இனிமேலும் செலவழிக்க முடியாது. அதற்கேற்ப கதையை மாற்றி படத்தை எடுத்து விடலாம் என்று சொல்லியிருக்கிறார்.