விஷ்ணுவை பார்த்து காரித்துப்பும் பூர்ணிமா!.. கமல் போல கண்டுக்காமல் இருக்கும் பிக் பாஸ்.. நடத்துங்க!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேட் வேர்ட்ஸ் எல்லாம் சர்வ சாதாரணமாக பேசி வரும் பூர்ணிமா இப்போ லேட்டஸ்ட்டாக காரித்துப்பும் வித்தையையும் செய்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறார். மாயா மற்றும் பூர்ணிமா என்ன செஞ்சாலும் கமல்ஹாசன் கண்டுக்காததை போலவே பிக் பாஸும் இவர்கள் செய்வதை மட்டும் பார்க்காமல் தூங்கி விடுகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விக்ரம் வெளியேறும் போது மாயா டோருக்கு வெளியே சென்று வந்ததை பார்த்தும் பிக் பாஸ் லேசாக தான் வார்னிங் கொடுத்தார் என்றும் எந்த பனிஷ்மென்ட்டும் தரவில்லை. தற்போது போட்டியில் தோற்ற நிலையில், பூர்ணிமா விஷ்ணுவை பார்த்து காரித்துப்பியது கேவலமான செயல் மோசமான பொம்பள பூர்ணிமா என பிக் பாஸ் ரசிகர்கள் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
அராத்தி என யூடியூப் சேனல் மூலம் பிரபலமான பூர்ணிமா முழு அராத்தியாகவே பிக் பாஸ் வீட்டில் நடந்து வருகிறார் என்றும் விஷ்ணுவை காதலிப்பது போல நடித்து கழட்டி விட்டு தற்போது நிக்சன் உடன் வெண்ணிலவே பாடலுக்கு அப்படி கட்டிப்பிடித்து டூயட் டான்ஸ் ஆடுகிறாரே என்றும் விஷ்ணுவின் ரியாக்ஷனை பாருங்க என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இந்த வாரம் இதையாவது கமல் கேட்பாரா அல்லது வழக்கம் போல தனது சொந்த புராணத்தை பாடுவாரா என தெரியவில்லையே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.