கர்நாடக வீரர் 404* ரன்கள் குவிப்பு.. 46 பவுண்டரி, 3 சிக்சர் விளாசிய 19 வயது வீரர்..யார் இந்த பிராகர்
கர்நாடகா : இந்தியாவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான நான்கு நாள் டெஸ்ட் போட்டியாக கோச் பெஹார் கோப்பை நடைபெறும். இந்த ஆண்டின் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியும் மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்தின.
சிவம்மோஹா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் மும்பை அணியில் ஆயுஸ் என்ற வீரர் 145 ரன்கள் எடுக்க மும்பை அணி 380 ரன்கள் எடுத்தது. இதில் கர்நாடகா பந்துவீச்சு தரப்பில் ஹர்திக் ராஜ் நான்கு விக்கெட் களையும் ராகுல் டிராவிட் மகனான சமித் டிராவிட் இரண்டு விக்கெட் களையும் கைப்பற்றினார்.
இதனை அடுத்து கர்நாடக அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. இதில் கர்நாடகா சார்பில் களமிறங்கிய பிரகார் சத்ருவேதி அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார். ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 256 ரன்கள் எடுத்திருந்தார். இதனை அடுத்து திங்கட்கிழமையும் தன்னுடைய ஆட்டத்தை பிரகார் சதுர்வேதி தொடங்கினார்.