Karthigai Deepam: கார்க்கிக் போட்ட பிளான்..தவிடு பொடியான சதி.. கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவளி கச்சேரியை தடுத்து நிறுத்த ரூபஸ்ரீ ஐஸ்வர்யா மற்றும் மாயா ஆகியோர் கூட்டு சேர்ந்து ஏதோ சதி திட்டம் தீட்டினர். அதனை தொடர்ந்து என்ன நடந்த்து என்பதை பார்க்கலாம்.
அதாவது நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்த சபாவின் மேனேஜர் உங்களுடைய பாட்டுக் கச்சேரியை இங்கு நடத்த முடியாது என சொல்கிறார்.
உடனே இளையராஜா மற்றும் கார்த்திக் சபாவிற்கு வந்து ஏன் நடக்க முடியாது என்று கேட்க, பில்டிங் ரொம்ப மோசமான கண்டிஷனில் இருப்பதால், பாட்டு கச்சேரி நடக்கும்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார். ஆனால் கார்த்திக் நம்ப மறுக்கிறான்.
இதனால் கார்த்திக் தன்னுடைய ஆபீஸில் வேலை செய்பவர்களை கூப்பிட்டு சபா முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவுகிறது.
இதனை ஐஸ்வர்யா அபிராமியிடம் காட்ட அபிராமி கார்த்திக் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கணும் என்று கடுப்பாகிறாள்.
உடனே போலீசும் அங்கு வந்துவிட, கார்த்திக் நான் எங்க கச்சேரி நடத்துவதற்காக அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து புக் பண்ணி இருக்கேன். ஆனா கடைசி நிமிடத்தில் இங்கு கச்சேரி நடத்தக்கூடாதுன்னு சொல்றாங்க, அத பத்தி நீங்களே கேளுங்க என்று ஆதாரங்களை கொடுக்க மேனேஜர் அதிர்ந்து போகிறார்.
தொடர்ந்து கார்த்திக் பில்டிங் எஞ்சினியரை வர சொல்லுங்க என்று கூப்பிட, மேனேஜர் அதெல்லாம் வர சொல்ல முடியாது என்று சொல்கிறார். சரி ஓனருக்கு போன் போடுங்க என்று சொல்ல, அவரோ கார்த்தியை தனியாக கூட்டிச்சென்று, நீங்க புக் பண்ண மாதிரி கச்சேரி நடத்துங்க பிரச்சினை வேண்டாம் என்று சொல்கிறார்.