Karthigai Deepam: தீபா செய்த உதவி.. கார்த்தியிடம் உண்மையை உடைக்கும் சவுண்ட் என்ஜினியர்.. கார்த்திகை தீபம் இன்று!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த கார்த்திக் பல்லவி ஏமாற்றிய விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, கார்த்திக் மற்றும் இளையராஜா என இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும்போது பல்லவி போனில் இருந்து போன் கால் வர, கார்த்திக் போனை எடுக்காமல் அவாய்ட் செய்கிறான். ஆனாலும் தீபா திரும்ப திரும்ப போன் செய்ய கார்த்திக் போனை எடுக்கிறான்.
பல்லவி உங்களிடம் கொஞ்சம் பேசணும் என்று சொல்ல, கார்த்திக் “இன்னும் பேச என்ன இருக்கு, அதான் போய் பாடி கொடுத்துட்டல அப்புறம் என்ன” என்று கேட்க, பல்லவி மன்னிப்பு கேட்க, கார்த்திக் “நான் எதிரியை கூட மன்னிப்பேன், ஆனால் நம்பிக்கை துரோகியை மன்னிக்கவும் மாட்டேன். என் பக்கத்தில் வச்சிக்கவும் மாட்டேன்” என்று சொல்லி போனை வைக்க தீபா வருத்தப்படுகிறாள்.
அடுத்து தீபா வெளியில் செல்லும்போது அவள் எதிரே நடந்து வந்த ஒரு குழந்தை மற்றும் அம்மா மீது கார் மோத வர தீபா இருவரையும் காப்பாற்றுகிறாள். இருந்த போதிலும் லேசான காயம் ஏற்பட தீபா அவர்களை ஹாஸ்பிடல்க்கு அழைத்து செல்கிறாள். அந்தப் பெண்மணி தனது கணவருக்கு போன் செய்து குழந்தைக்கு அடிபட்ட விஷயத்தை சொல்லி ஹாஸ்பிடல் வர சொல்கிறாள்.
ஹாஸ்பிடல் வந்த அவர் தீபாவைப் பார்க்க “இது பல்லவி தானே” என்று குழப்பம் அடைகிறார். காரணம் சிதம்பரம் ஆபிஸில் வேலை செய்யும் சவுண்ட் எஞ்சினியர் இவர் தான். தீபா பாடிய பாடலை ரெகார்ட் செய்ததும் இவர் தான் என்பது தெரிய வருகிறது.