கருட சேவை திருவிழா கோலாகலம்.! மக்களுக்கு அருள் பாலித்த 27 கருட ஆழ்வார்கள்..!!

ஸ்ரீமுஷ்ணத்தில் மூன்றாம் ஆண்டு கருட சேவை திருவிழாவை ஒட்டி 27 கிராமங்களில் இருந்து கருட ஆழ்வார்கள் முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்து ஸ்ரீமுஷ்ணம் வந்தடைந்தனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் மூன்றாம் ஆண்டு கருட சேவை வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக சுமார் 5 மணி அளவில் திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீ மத் எம்பெருமானார் ஜீயர்ஸ்வாமிகள் தலைமையில் மற்றும் திரு ச்சித்ர கூடம் அருள்மிகு வரதராஜ பெருமாள் சன்னதி ரெங்கராச்சாரியார் தலைமையில் சுமார் 500 பாகவதர்கள் சங்கீத பஜனை உடன் ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஆஞ்சநேயர் சன்னதியில் இருந்து சுமார் 27 கருட ஆழ்வார்கள் நான்கு வீதிகளிலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தினர்.

இதில் மே மாத்தூர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம பெருமாள், திருப் பெயர் பட்டாபி பெருமாள், எடையூர் ஸ்ரீ நிவேத பெருமாள், மன்னம்பாடி வேணுகோபால் பெருமாள், கோமங்கலம் பிரசன்னா வெங்கடேச பெருமாள், கோமங்கலம் லட்சுமி நாராயணர் பெருமாள், ரெட்டி குப்பம் ஸ்ரீ நிவேதச பெருமாள், விருத்தாச்சலம் ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள், விருத்தாச்சலம் வரதராஜ பெருமாள், இனமங்கலம் ராதாகிருஷ்ணன் பெருமாள் என 27 கருட ஆழ்வார்கள் தங்களது வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *