KB சுந்தராம்பாள் நடித்து 16 பாடலை பாடி மாபெரும் வெற்றி பெற்ற படம் பற்றி தெரியுமா?

டிகர் திலகமே தோத்து விடும் அளவிற்கு ஒரு பெண் நடிக்க முடியும் என்றால், அது கே பி சுந்தராம்பாள் அவர்கள் தான்.

இன்றைய காலத்தினர் இவர்தான் அவ்வையார் என்று நம்பும் அளவிற்கு ஔவையாரின் அனைத்து விதமான செயல்களையும் பாடல்கள் மூலம் முருகப்பெருமானை வணங்குவதிலும் நம்பும் அளவிற்கு அவர் நடித்துள்ளார் என்றால் மிகை ஆகாது.

இன்றைய தலைமுறையினருக்கு ஔவையார், யார் என்று நினைத்தால் கண்ணை மூடிக்கொண்டால் கே பி சுந்தராம்பாள் தான் தெரிவார். அந்த அளவு அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் திறமை அவருக்கு உள்ளது.

எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனை தன் கண் முன் நிறுத்தினாரோ சிவாஜி, அதே போல் ஔவையாரை தன் கண் முன் நிறுத்தியுள்ளார் கே பி சுந்தராம்பாள்.

ஔவையார் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. சுந்தராம்பாள் ஔவையார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் வாசன் ஜெமினி ஸ்டுடியோஸ்.

எத்தனையோ புராண கதைகளை புரட்டி அவ்வையாரின் கதையை இதில் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள்.

குழந்தை இல்லாத தம்பதிகள் ஒரு குழந்தையை கண்டு வளர்க்கிறார்கள். மிகவும் செல்வாக்குடன் அந்த குழந்தையை வளர்க்கிறார்கள். வளர்ந்த உடன் திருமணத்தில் நாட்டம் இல்லாத அந்தப் பெண் முருகப்பெருமானையே தனது இஷ்ட தெய்வமாக வணங்கி வருகிறார்.

பெற்றோர் திருமணத்திற்காக வற்புறுத்தும் பொழுது முருகப்பெருமானிற்காகவே கவனம் செலுத்திய அந்த பெண், முருக பெருமானிடம் வயதான தோற்றத்தை கேட்கிறார். முருகப்பெருமானோ அந்த பெண்ணிற்கு வயதான தோற்றத்தை தருகிறார் அவர்தான் அவ்வையார்.

முருகப்பெருமானின் செயல்களையும், வீரத்தையும் அவரது பக்தியும் பரப்புகிறார் அவ்வையார். அப்படி அவருடைய பக்தியால் கவரப்பட்ட ஒரு உள்ளூர் அரசனும் அவனுடைய இரண்டு மகள்களும் அவளை சில நாட்கள் நீதிமன்றத்தில் தங்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். அவ்வையார் அவர்களின் விருந்தோம்பலில் கவரப்பட்டு அவர்களை ஆசிர்வதிக்கிறார்.

இந்த அரசன் இறந்து விடவே இந்த இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள இருந்த ஜெமினி கணேசனை எதிரிகள் சிறை பிடிக்கிறார்கள். ஜெமினிகணேசனை முருகனின் உதவியால் காப்பாற்றுகிறார் அவ்வையார். இது இந்த கதையின் போக்காக அமையும்.

இதில் மொத்தம் 17 பாடல்கள் தமிழிலேயே அதிக பாடல்களை கொண்டு இயற்றிய படம் என்றால் இதுதான் என்பது முக்கியமாகாது. இதில் 16 பாடல்களை கே பி சுந்தராம்பாள் அவர்களே பாடியிருக்கிறார்.

இந்த படத்தை வெளிநாட்டில் கூட திரையிட்டனர் என்று சொல்லப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *