Keerthy Suresh – ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்.. அட இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே

நடிகை கீர்த்தி சுரேஷ் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக போலா ஷங்கர் வெளியானதை தொடர்ந்து சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. மேலும் ஹிந்தியில் தெறி படத்தின் ரீமேக் மூலம் என்ட்ரி கொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு வாய்ப்புகள் குவிந்தன. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல தமிழ் இயக்குநர்கள் விரும்பினர். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, ரஜினி உடன் அண்ணாத்த என பல படங்களில் நடித்தார்.
சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.
தேசிய விருது: அதன்படி நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: தமிழ் பக்கம் பெரிதாக தலைகாட்டாமல் இருந்த அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். லீலாவதி என்ற கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். அந்தப் படத்துக்கு பிறகு ரகுதாத்தா என்ற படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. மாமன்னன் கொடுத்த உற்சாகத்தால் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்ற நினைப்பில் இருக்கிறார் கீர்த்தி.
அடுத்தடுத்த படங்கள்: அவரது நடிப்பில் கடைசியாக போலா சங்கர் படம் வெளியானது. அடுத்ததாக சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி படங்கள் வெளியாகின்றன. இவற்றில் ரகுதாத்தா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையே தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்: இந்நிலையில் ரசிகர் ஒருவரிடம் கீர்த்தி சுரேஷ் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதாவது கீர்த்தியின் தீவிரமான ரசிகர் 233 நாட்கள் தொடர்ச்சியாக ட்வீட் செய்து கீர்த்தி சுரேஷ் ரிப்ளை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார். இந்த சூழலில் 234ஆவது நாளில் அவரது ட்வீட்டை கவனித்த கீர்த்தி சுரேஷ், “234 ஃபேன்சி நம்பர். தாமதமாக ரிப்ளை செய்ததற்கு மன்னிக்கவும்.நிறைய காதல்களுடன்” என்று பதிலளித்திருக்கிறார்.