படத்திற்காக அப்படியொரு விஷயத்தை செய்த கீர்த்தி சுரேஷ் .. என்ன தெரியுமா?
அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் திரைப்படம் வருகிற 16 -ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய ரோலில் யோகி பாபு, சமுத்திரக்கனி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
உடல் எடையை அதிகரித்த நடிகை
ஜெயம் ரவியின் முந்தைய திரைப்படமான இறைவன் மற்றும் அகிலன் படங்களுக்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் இறைவன் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சைரன் படத்திற்காக 5 கிலோ வரை உடல் எடை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.