கேரள முதல்வர் பினராயி விஜயன் காருக்கு ரூ.500 அபராதம்.. விதிகளை பின்பற்றாததால் நடவடிக்கை!
கேரள முதல்வர் பினராயி விஜயன் காருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டயம் அருகே உள்ள முண்டக்கயம் – குட்டிக்கானம் சாலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கார் சென்றுள்ளது. ஆனால் அந்த காரில் அவர் பயணம் செய்யவில்லை. அவரது பாதுகாவலரும், அதிகாரிகள் மட்டுமே அந்த காரில் சென்றுள்ளனர்.
அந்த காரின் முன்னே சென்ற பேருந்தில் பினராயி விஜயன் சென்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் சீட் பெல்ட் அணியாமல் சென்றுள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதை அடுத்து பினராயி விஜயன் காருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நோட்டீஸ் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்திருகு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பி 2 மாதங்களாகியும் அபராதம் செலுத்தப்படாதது குறிப்பிடத்தக்கது.