கேரள பெண்களின் அழகின் இரகசியம் – இலகுவான குறிப்புகள்

கேரளா என்று சொன்னாலே அனைவரிற்கும் முதலில் தோன்றுவது அங்கு இருக்கும் பெண்கள் தான். காரணம் அவர்களின் அழகு.

ஆம். உண்மை தான். பெரும்பாலும் அதிக கூந்தல், கொழு கொழு கண்ணங்கள், குழிகள் விழும் சிரிப்பு, வெள்ளையான சருமம் போன்ற தோற்றத்தை தான் அழகு என்று கூறுவார்கள்.

அந்தவகையில் கேரள பெண்கள் தங்களது முகத்தை எப்படி அழகாக வைத்துக்கொள்கிறார்கள் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

இலகுவான குறிப்புகள்
கேரளா மாநிலம் இயற்கையில் ஒன்றி வாழும் ஒரும் இடமாகும். எனவே இந்கு இருக்கும் பெண்களும் தங்களது சருமத்தை இயற்கையான பொருட்களை வைத்தே பராமரிப்பார்கள்.

நீளமான கருங்கூந்தல்
தினமும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் குளிக்க வேண்டும். ஷாம்புவிற்குப் பதிலாக சீகைக்காயை பயன்படுத்துவார்கள்.

பொடுகை தடுப்பதற்கு
பொடுகு வராமல் இருப்பதற்கு இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தலை முடி கழுவார்கள்.

மென்மையான சருமம்
சருமம் மென்மையாக இருப்பதற்கு தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள். குறிப்பாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவார்கள்.

தினமும் பயன்படுத்தும் முகப்பொடி
தேவையான பொருட்கள்
பச்சை பயறு – 100 கிராம்

முட்டை வெள்ளைக்கரு – 2

செய்முறை
முதலில் பச்சை பயரை காய வைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்தக்கொள்ளவும்.

அடுத்து அதை ஒரு தட்டில் பரப்பி வெளியில் காயவைக்கவும்.

அதை இரண்டு நாட்களுக்கு காய வைத்து, ஒரு கரண்டியில் கிளறிக் கொண்டும் இருக்கவும்.

பின் அதை ஒரு மிக்ஸியில் சேர்த்து பவுடர் போன்று அரைத்து எடுக்கவும்.

பயன்படுத்தும் முறை
தினமும் குளிக்கும் போது சோப்பு போடுவதற்கு பதிலாக இதை தேய்த்து குளிக்கலாம். அல்லது சோப்பு போட்டு குளித்தப்பிறகு இதை முகத்திற்கு போட்டு சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *