Ketu 2024: கேதுவால் சிரமப்படும் ராசிகள்.. கவனமாக இருப்பது நல்லது
நிழல் கிரகமாக நவகிரகங்களில் விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் இருவரும் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். கேது பகவான் தற்போது கன்னி ராசியில் பயணம் செய்து வருகிறார் வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார்.
சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக ராகு மற்றும் கேது விளங்கி வருகின்றனர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அதனால் இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
கேது பகவானால் சில ராசிகள் வரும் 2024 ஆம் ஆண்டு கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் கேது பகவான் இரண்டாம் வீட்டில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் மற்றவர்களுடன் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும். தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் சிக்கல்கள் ஏற்படும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் முன்னேற்றத்தை கொடுத்தாலும் கவனமாக இருக்க வேண்டும்.
மீன ராசி
கேது பகவான் உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் ஒன்றரை மாதம் பயணம் செய்கின்ற காரணத்தினால் வெளிவட்டாரத்தின் தொடர்புகள் அதிகரிக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும். போது அமைதியாக இருப்பது நல்லது. தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும் எனவே கவனமாக இருங்கள்.
கும்ப ராசி
தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியடைய அதிக வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மற்றவர்களிடம் பேசும் போது நிதானமாக பேச வேண்டும். கோபம் ஏற்படும் போது அதை தவிர்த்து விடுவது நல்லது. செலவுகள் அதிகமாகும். இருப்பினும் சிக்கனமாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.