விவசாயிகளுக்கு குஷி.. பிஎம் கிசான் யோஜனா திட்டம்.. இந்த சான்ஸ் இருக்கா? மத்திய அரசு அறிவிப்பு வருது

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக, பிஎம் கிசான் தொகையை மத்திய அரசு, 50 சதவீதம் வரை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) அதாவது பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள்: இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்பட்டு வருகிறது… அந்தவகையில், ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது.

இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து விவசாயிகளுமே இந்த திட்டத்தின் பலன்களை பெறலாம். ஆனால், இந்த பலனை பெற விரும்பினால், விவசாயிகளின் பிஎம் கிசான் கணக்குகளுடன் ஆதார் நம்பரையும் இணைக்க வேண்டும் என்பது கட்டாயம்.. அப்போதான் தவணைத்தொகை கிடைக்கும்..

அதுமட்டுமல்ல, பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் கொள்முதல் செய்வதற்காக தவணை உதவித் தொகை பெறுவதற்கான நில ஆவணங்கள், ஆதார் எண் ஆகியவற்றை டவுன்லோடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.

தகுதிகள்: இணைய, நிலத்தின் உரிமையாளராக நீங்கள் இருக்க வேண்டும். அதேபோல, ஒருவேளை, மற்றவர்களின் நிலத்தில் விவசாயம் செய்தாலும், அந்த நிலம் அவரது பெயருக்கு பதிலாக, அவரது தந்தையின் பெயரிலோ, அல்லது அவரது தாத்தாவின் பெயரிலோ இருந்தால், இந்த திட்டத்துக்கு அவர் விண்ணப்பிக்க முடியாது.

எப்படி சேருவது: இந்த திட்டத்தில் இணைய, நிலத்தின் உரிமையாளராக நீங்கள் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான தகுதியாகும்.. ஒருவேளை, மற்றவர்களின் நிலத்தில் விவசாயம் செய்தாலும், அந்த நிலம் அவரது பெயருக்கு பதிலாக, அவரது தந்தையின் பெயரிலோ, அல்லது அவரது தாத்தாவின் பெயரிலோ இருந்தால், இந்த திட்டத்துக்கு அவர் விண்ணப்பிக்க முடியாது.

எனினும், பணவீக்கமும், விலைவாசியும் தொடர்ந்து நாட்டில் அதிகரித்தபடியே உள்ளதால், பிஎம் கிசான் திட்டத்தின் தொகையையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.. இந்த கோரிக்கையைதான் அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது.

அறிவிப்பு: விரைவில் 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், பிஎம் கிசான் தொகையை, 50 சதவீதம் அதாவது ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.. அதாவது, இப்போதுள்ள 6 ஆயிரத்தை சேர்த்து, மொத்தம் ரூ.8 ஆயிரமாக உயர்த்தலாம் என மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதாம்.. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்..

ஒருவேளை, தேர்தல் சமயத்தில் இந்த அறிவிப்பு வெளியாகும்பட்சத்தில், பாஜக அரசுக்கு விவசாயிகளிடையே, பெருத்த வரவேற்பும், மிகுந்த ஆதரவும் கிடைக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.

16வது தவணை: இந்நிலையில், PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.6,000க்கு பதிலாக ரூ.8,000 வழங்கும் பட்சத்தில், ஒரு வருடத்தில் 3 தவணைகளாக உதவித்தொகை வழங்காமல், 4 தவணைகளாக வழங்க இருப்பதாகவும் தற்போது தகவல் கிடைத்துள்ளது. இப்போது வரையிலும் 15 தவணைக்கான பணத்தை விவசாயிகள் பெற்றிருக்கும் நிலையில், 16வது தவணைக்காக காத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், பிப்ரவரி – மார்ச் 16வது தவணைக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *