2024-ல் அறிமுகமாகும் கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் கார்… முழு விவரங்கள் இதோ!
கடந்த சில வருடங்களாக மக்களின் பேராதரவைப் பெற்று வருகிறது கியா மோட்டார்ஸின் கார்கள். இந்நிலையில் அடுத்த ஆண்டு கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் (Kia Sonet facelift) காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது கியா நிறுவனம்.
இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் காம்பேக்ட் SUV கார்களில் ஒன்றாக கியா சோனெட் இருக்கிறது. 2024-ம் ஆண்டில் அறிமுகமாகவுள்ள கியா சோனெட், டாடா நெக்ஸான், மாருதி சுசூகி ப்ரெஸா, ஹூண்டாய் வீனுயூ மற்றும் மஹிந்தரா XUV300 கார்களுக்கு சிறந்த போட்டியாளராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா சோனெட் கார் குறித்து மேலும் சில தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
கியா சோனெட் எப்போது அறிமுகமாகும்?
இந்தியாவில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தக் கார் அறிமுகமாகவுள்ளது.
முன்பதிவு தொடங்குவது எப்போது?
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. சோனெட் காரை வாங்க விரும்புகிறவர்கள் கியா டீலரை அனுகலாம்.
எப்போது டெலிவரி செய்யப்படும்?
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் காரின் டெலிவரி அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும். எனினும் டீசல் MT மாடல்கள் பிப்ரவரி மாதமே டெலிவரி செய்ப்படும் என்று கியா நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
2024 கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் காரின் மாடல்கள்
HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-லைன் போன்ற மாடல்களில் வரும் கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட், 19 வேரியண்டுகளில் கிடைக்கிறது.
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் இஞ்சின்
புதிய கியா சோனெட் கார் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் G1.2-லிட்டர் பெட்ரோல் (83PS/115Nm), ஸ்மார்ட்ஸ்ட்ரீம் G1.0-லிட்டர் T-Gdi பெட்ரோல் (120PS/172Nm) மற்றும் 1.5 லிட்டர் CRDi VGT டீசல் (116PS/250Nm) என மூன்று இஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இதன் டிரான்ஸ்மிசனைப் பொறுத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோலுடன் கூடிய 5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு iMT மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோலுடன் கூடிய 7-ஸ்பீடு DCT, 1.5 லிட்டர் டீசலுடன் கூடிய 6-ஸ்பீடு iMT மற்றும் AT உள்ளது. 1.5 லிட்டர் டிசல் 6-ஸ்பீடு MT மறுபடியும் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
2024 கியா சோனெட் ஃபேஸ்லிஃப்டின் சிறப்பம்சங்கள்
இந்தக் காரில் ஆறு ஏர் பேக், அழகான LED லைட்டிங் வசதி, 10.25 இன்ச் ஹெடி தொடுதிரை நேவிகேஷன் வசதி, 10.25 இன்ச் இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்டர் பேனல் எனப் பலவும் உள்ளது. அதுமட்டுமின்றி இந்தக் காரில் 15 அதி நவீன பாதுகாப்பு பேக்கேஜ் மற்றும் 10 ADAS வசதிகள் என மொத்தமாக 25 பாதுகாப்பு வசதிகள் உள்ளது. மேலும் கியா சோனெட் காரில் 70-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.