ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பிரதமர் ரிஷியின் மனைவி: கிடைத்த பெரிய வரிச்சலுகை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ஒன்றின் மூலம், அவரது மனைவியான அக்‌ஷதா மூர்த்திக்கு லாபம் கிடைக்கலாம் என்ற குற்றச்சாட்டு சர்ச்சையை உருவாக்கியது.

மனைவியால் சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரதமர் ரிஷி

கடந்த ஆண்டு, பிரித்தானிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது. அதில், குழந்தைகள் நலன் அமைப்புகளுக்கான உதவித்தொகை, சில நிபந்தனைகளுக்கு உட்படும் நிலையில் இரட்டிப்பாக்கப்படுவதாக அறிவித்திருந்தார் சேன்ஸலர் ஜெரமி ஹண்ட்.

பிரதமர் ரிஷியின் மனைவியான அக்‌ஷதா மூர்த்தி, குழந்தைகள் நல அமைப்பான Koru Kids என்னும் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார்.

ஆகவே, பிரதமர் அறிவித்த சலுகை மூலம், அவரது குடும்பத்துக்கே கூடுதல் இலாபம் கிடைக்கிறதா என்பதைக் குறித்து ரிஷி பதிலளிக்கவேண்டுமென அரசியல்வாதிகள் பலர் கோரியிருந்தனர்.

மேலும், Koru Kids நிறுவனத்தில் ரிஷியின் மனைவி பங்குதாரராக உள்ள விடயத்தை அவர் மறைத்ததாக சில பிரித்தானிய அரசியல்வாதிகள் பிரச்சினை எழுப்பினார்கள். இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை உருவாகியது.

சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்த அக்‌ஷதா

ஆகவே, அந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்த அக்‌ஷதா. தான் பங்குதாரராக இருந்த குழந்தைகள் நல அமைப்பான Koru Kids நிறுவனத்திலிருந்த தனது பங்குகளை, தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கிவிட்டார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பிரதமர் ரிஷியின் மனைவி

ஆனால், தனது பங்குகளை தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கியதிலும் அவருக்கு லாபம்தான் கிடைத்துள்ளது.

Koru Kids நிறுவனத்திலிருந்த தனது பங்குகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் அக்‌ஷதா. பொதுவாக ஒருவர் பங்குகளை விற்பதால் கிடைக்கும் தொகைக்கு, Capital gains tax என்னும் வரி செலுத்தவேண்டியிருக்கும்.

ஆனால், தான் பங்குகளை விற்றதால் கிடைக்க பணத்தை அக்‌ஷதா தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாலும் அவருக்கு லாபம்தான் கிடைத்துள்ளது. ஏனென்றால், தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வரி கிடையாது.

ஆக, பங்குகளை விற்று நன்கொடையாக கொடுத்ததால், ஒரு பக்கம், அக்‌ஷதா சர்ச்சையிலிருந்தும் தப்பிவிட்டார், அதே நேரத்தில் அவர் அந்த தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்ததால், தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வரி கிடையாது என்பதால், அவர் மிகப்பெரிய ஒரு தொகையை வரியாக செலுத்துவதிலிருந்து அவருக்கு விலக்கும் கிடைத்துள்ளது.. ஆக மொத்தத்தில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டார் அக்‌ஷதா.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *