கிம் ஜாங் உன்-க்கு விளாடிமிர் புதின் கொடுத்த கார் கிப்ட்.. கொதிக்கும் ஐநா, ஏன் தெரியுமா..?
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-க்கு நட்பை வெளிப்படுத்தும் விதமாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஒரு புத்தம் புதிய சொகுசு லிமோசின் காரை பரிசாக வழங்கியுள்ளார். ‘ஆரஸ் செனட்’ (Aurus Senat) என்ற அந்த சொகுசு கார் ஒரு பரிசாக அளிக்கப்பட்டது மூலம் ரஷ்யா வடகொரியா-வுக்கு எதிரான ஐ.நா.வின் தடைகளை மீறியதற்காக என்று விமர்சிக்கப்படுகிறது.
வடகொரியாவுக்கு கார்கள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வழங்குதல், விற்பனை செய்தல், பரிமாற்றம் செய்ய ஐ.நா. தடை விதித்துள்ளது. இதற்கு மத்தியில் புதின் இந்தப் பரிசை அளித்துள்ளார்.
விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ வாகனம் இந்த ஆரஸ் செனட் லிமோசின் ரக காராகும். ஆரஸ் செனட் 2018 இல் உலகளவில் அறிமுகமானது. முதலில் ரஷ்ய அதிபருக்காக ‘கார்டேஜ்’ என்ற குறியீட்டு பெயரில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது.
இந்த ஆரஸ் செனட் காரில் அப்படி என்ன ஸ்பெஷல்.. வாங்க பார்த்திடுவோம். ஆரஸ் செனட் கார் 5,631 மிமீ நீளமும், 2,700 கிலோ எடையும் கொண்டது. அதிபர் புதினின் நீட்டிக்கப்பட்ட லிமோசின் 6,700 மிமீ அளவைக் கொண்டுள்ளது வெடிகுண்டு தாக்குதல்களிடமிருந்து கவசப் பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
இதில் குண்டு துளைக்காத கவசம், வலுவூட்டப்பட்ட கண்ணாடி, வெடிகுண்டு-எதிர்ப்பு தரைவழி பாதுகாப்பு, ரன்-பிளாட் ரப்பர் டயர்கள், ஒருங்கிணைந்த “தாக்குதல்” ஆயுதங்கள் மற்றும் ஆட்டோமேடிக் ஆக்ஸிஜன் சப்ளை ஆகிய அம்சங்கள் அடங்கும்.
காரின் மத்தியில் பெரிய டிஎப்டி டிஸ்ப்ளே, சென்டர் கன்சோலில் ஸ்லாட் செய்யப்பட்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் டூயல் இன்ஸ்ட்ரூமென்ட் பாட்களை இந்த மாடல் கொண்டுள்ளது. பின் இருக்கைகள் தனித்தனியாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையில் உள்ளன.
இந்த லிமோசின் 6.6 லிட்டர் V12 இன்ஜினுடன் 850 bhp திறன் கொண்டது. ரஷ்யாவில் மோட்டார் போர்ஷே இன்ஜினியரிங் ஆக்சஸரிகளுடன் உருவாக்கப்பட்டது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆடம்பர கார்களுக்கு புதியவர் அல்ல. அவரிடம் மிகப் பெரிய சொகுசு கார் கலெக்ஷன் உள்ளது.
அதில் குறைந்தது இரண்டு Maybach 62s, ஒரு Mercedes-Maybach S650, ஒரு Lexus LX, ஒரு Mercedes-Maybach GLS 600 அடங்கும். புதிய ஆரஸ் செனட் இப்போது இந்தப் பட்டியலில் கூடுதலாக சேர்ந்துள்ளது.