Zulu எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய கைனெட்டிக் கிரீன் நிறுவனம்… விலை மற்றும் அம்சங்கள்!
புனேவை சேர்ந்த கைனெட்டிக் கிரீன் (Kinetic Green) நிறுவனம் தனது புதிய தயாரிப்பாக Zulu எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. எக்ஸ்-ஷோரூம் மற்றும் FAME II மானியங்கள் உட்பட இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் ரூ.95,000 என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்பு லூனா மற்றும் கைனெட்டிக்-ஹோண்டா ஸ்கூட்டர்களுக்காக பிரபலமாகி இருந்த அதே கைனெட்டிக் கிரீன் நிறுவனம் தான் தற்போது இந்த புதிய Zulu எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. 1990-களில் கைனெட்டிக் ஹோண்டா ஸ்கூட்டர்களை உருவாக்கி ஹோண்டாவுடனான பார்ட்னர்ஷிப்பிற்காக பிரபலமாக அறியப்பட்ட பிராண்டாக Kinetic இருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, பேட்டரியுடன் கூடிய சப்ஸ்கிரிப்ஷனாக ரூ.69,999 விலையில் விற்பனை செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய கைனெட்டிக் க்ரீன் ஜூலு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் apron மவுண்ட்டட் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளது, ஹேண்டில்பார் ஸ்டாக்கின் மேல் டிஆர்எல் அமைந்துள்ளது. புதிய கைனெட்டிக் Zulu ஸ்கூட்டரின் நீளம் 1,830 மிமீ, அகலம் 715 மிமீ அகலம் மற்றும் உயரம் 1,135 மிமீ-ஆக இருக்கிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் 1,360 மிமீ வீல்பேஸ் மற்றும் 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடை 93 கிலோவாக இருக்கும் நிலையில், இது 150 கிலோ வரை எடையை சுமக்க கூடியது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
Zulu எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி, மோட்டார் மற்றும் ரேஞ்ச்:
இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.27 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஹப் எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 2.8 bhp பீக் பவரை வழங்குகிறது. Zulu எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 104 கிலோ மீட்டர் தூரம் செல்லும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
செயல்திறனைப் பொறுத்தவரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 60 கிமீ ஆகும். ஸ்டாண்டட் சார்ஜரை 15-amp சாக்கெட்டில் பிளக் செய்து சார்ஜிங்கிற்காக பயன்படுத்தினால் அரை மணி நேரத்திற்குள் 0 – 80 சதவீதம் வரை இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்யது கொள்ள முடியும். கைனெடிக் கிரீன் ஜூலு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக்ஸ்களுடன் வரும் அதே நேரம் ஃப்ரன்ட் & ரியரில் டிஸ்க் பிரேக்ஸ்களுடன் கூடிய அலாய் வீல்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் எதிர்கால திட்டம்…
புதிய Zulu எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் என தெரிகிறது. அடுத்த ஓராண்டில் சுமார் 40,000 ஜூலு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய கைனெட்டிக் கிரீன் இலக்கு வைத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மில்லியன் (10 லட்சம்) எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக கைனெட்டிக் கிரீன் தெரிவித்துள்ளது.
அதே போல அடுத்த ஆண்டுக்குள் ஆயில்-கூல்ட் பேட்டரி ஆப்ஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாடலை விட 15 சதவீதம் வரை இதன் விலை அதிகமாக இருக்கும். கைனெட்டிக் கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சலுஜ்ஜா ஃபிரோடியா மோட்வானி கூறுகையில் அடுத்த ஆண்டு e-Luna மற்றும் மற்றொரு உயர் செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறினார்.