மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் மன்னர் சார்லஸ்: வெற்றிகரமாக முடிந்த புரோஸ்டேட் சிகிச்சை
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வெற்றிகரமான அறுவை சிகிச்சை பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.
வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை
பிரித்தானிய மன்னர் சார்லஸ் விரிவடைந்த புரோஸ்டேட் சிகிச்சைக்காக கடந்த வெள்ளிக்கிழமை காலை லண்டன் கிளினிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மன்னர் சார்லஸ் சிகிச்சைக்காக 3 நாள் இரவு மருத்துவமனையில் தங்கியிருந்த நிலையில், வெற்றிகரமான புரோஸ்டேட் சிகிச்சைக்கு பிறகு மன்னர் சார்லஸ் இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் மன்னர் சார்லஸ் ஓய்வு காரணங்களுக்காக அவரது பொது நிகழ்ச்சி திட்டங்கள் மாற்றி வைக்கப்பட்டு இருப்பதாகவும், கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை அரச நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்து கொள்ள மாட்டார் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது.
நன்றி கூறிய மன்னர் சார்லஸ்
சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து மனைவி கமிலாவுடன் வெளியேறிய மன்னர் சார்லஸ் பொது மக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கிய மற்றும் பார்வையிட வந்த அனைத்து மன்னர் நன்றி தெரிவித்துள்ளார் என்று அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.