மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்… ராணி கமீலாவுக்கு உருவாகியுள்ள அச்சம்
மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அது ராணி கமீலாவுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளதாக, ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வயது முதிர்ந்தும் வற்றாத காதல்
மன்னர் சார்லஸ், ராணி கமீலாவின் காதல் கதையை அறியாதவர்கள் குறைவு என்றே கூறலாம். சார்லசைக் காதலித்து, திருமணம் குறித்து சரியான முடிவு எடுக்காமல் வேறொரு நபரைத் திருமணம் செய்து, அதனால் சார்லஸ் கடமைக்கு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து, இருவருமே சரியாக வாழாமல், பிரிவு, விவாகரத்து, ஒரு அநியாய உயிரிழப்பு என சார்லஸ் கமீலாவின் காதல் கதையின் பின்னணியை வைத்து, ஒன்று இரண்டல்ல, பல திரைப்படங்கள் எடுக்கலாம்.
கடைசியில், தங்கள் 50 வயதுகளில் திருமணம் செய்துகொண்டார்கள் இருவரும். ஆனாலும், அந்த மகிழ்ச்சி தமபதியரிடம் அப்பட்டமாக தெரிவதை இன்றும் காணமுடியும். ஆக, வயது முதிர்ந்தும், அவர்களுடைய காதல் வற்றவில்லை என்றே தோன்றுகிறது.
கமீலாவுக்கு உருவாகியுள்ள அச்சம்
இந்நிலையில், சமீபத்தில் மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், ராணி கமீலாவுக்கு ஒரு அச்சம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கிறார் பிபிசி தொலைக்காட்சியின் ராஜ குடும்ப செய்தியாளரான ஜென்னி பாண்ட் (Jennie Bond) என்பவர்.
ஒருவேளை மன்னர் தன்னைப் பிரிய நேர்ந்தால் தன் நிலைமை என்ன ஆகும் என அவர் எண்ணக்கூடும் என்கிறார் ஜென்னி.
உண்மையாகவே அது ஒரு முக்கியமான கேள்விதான். ஏனென்றால், மன்னர் சார்லசின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தாலும், மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மனதில் இடம் பிடிக்க கமீலா பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்.
இளவரசர் வில்லியம் மனதில் அடித்துப் பிடித்தாவது இடம் பிடித்து விட்டாலும், இளவரசர் ஹரி தன்னை வில்லியாக பார்ப்பதாக அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
ஆக, மன்னர் எப்படியாவது உடல் நலம் பெற்றுவிடவேண்டும், தானும் அவரும் சேர்ந்தே முதுமையை அனுபவிக்கவேண்டும் என்றுதானே அவர் நினைப்பார்.
எனவே, மன்னர் இல்லாத ஒரு வாழ்வை தன்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்பதால், எப்படியாவது மன்னரை உந்தித் தள்ளி, இனியும் நீங்கள் இளைஞர் இல்லை, உங்கள் உடல் நலத்தை நீங்கள் நன்றாக கவனித்துக்கொள்ளவேண்டும், அதற்கு உற்ற துணையாக நானும் உங்களுடன் இருக்கிறேன், சீக்கிரமாக உடல் நலம் பெற்று பணிக்குத் திரும்புங்கள் என்று கூறி, மன்னரை ராணி கமீலா உற்சாகப்படுத்துவார் என்றே தோன்றுகிறது என்கிறார் ஜென்னி.