மன்னர் சார்லஸ் பதவியைத் துறக்கவேண்டும்: ராணி கமீலா விருப்பம்?
மன்னர் சார்லஸ் பதவியைத் துறக்கவேண்டும் என ராணி கமீலா விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் வில்லியம் விரைவில் மன்னராகலாம்?
மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அவர் சிகிச்சையிலிருக்கிறார். முக்கிய பொறுப்புகள் வகிப்பவர்களில் ஒருவரான இளவரசி கேட்டும் சிகிச்சைக்குப் பின் ஓய்வில் இருக்கிறார்.
ஆக, அதிகாரப்பூர்வ பொறுப்புகளை நிறைவேற்ற ஒருவர் நிச்சயம் வேண்டும். எனவே, இளவரசர் வில்லியமுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என கருதப்படுகிறது. அது மன்னர் பதவியா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
மன்னர் சார்லஸ் பதவியைத் துறக்கவேண்டும்: ராணி கமீலா விருப்பம்?
இதற்கிடையில், மன்னர் சார்லஸ் தனது பதவியைத் துறக்கவேண்டும் என ராணி கமீலா விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மன்னர் தனது பதவியைத் துறந்துவிட்டு, தனது முதுமைக் காலத்தை மகிழ்ச்சியாக செலவிடவேண்டும் என ராணி கமீலா வலியுறுத்திவருவதாக ராஜ குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளவரசர் வில்லியம் அனைத்துக் கடமைகளையும் செவ்வனே செய்துவருவதைக் கண்டு, ராணி கமீலா பெருமையடைவதாகவும், அதே போல, மன்னரும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், In Touch Weekly என்னும் ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை!