King Rasis: சனி கொடி அசைத்து விட்டார்.. அசைக்க முடியாத ராசிகள்
சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார்.
சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இடம் மாறினார். இந்த புதிய ஆண்டான 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார்.
சனிபகவானின் ராசி மாற்றம் வரும் 2025 ஆம் ஆண்டு நிகழவுள்ளது. அதுவரை 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
சனிபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மேஷ ராசி
சனிபகவானின் அருளால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க போகின்றது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சனி பகவானின் தாக்கம் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும். கடின உழைப்பே உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.
மிதுன ராசி
பல்வேறு விதமான புதிய வாய்ப்புகளை சனி பகவான் உங்களுக்கு உருவாக்கி கொடுக்கப் போகின்றார். செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு அதேசமயம் அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. புதிய இடமாற்றம் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சனிபகவானின் செயல் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.