கிச்சன் கீர்த்தனா: சேமியா வெஜ் பிரியாணி
அப்படிப்பட்டவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸாக இந்த சேமியா வெஜ் பிரியாணி அமையும். காரணம், இந்த பிரியாணியில் காய்கறிகளும் சேர்த்து செய்வதால், உடலுக்கு வேண்டிய சத்துகள் உடனடியாக கிடைத்து நாள் முழுவதும் புத்துணர்ச்சியைத் தரும்.
என்ன தேவை?
சேமியா – 100 கிராம்
நறுக்கிய கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம் – ஒரு கப்
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – 1 கப் (200 மில்லி அளவு).
எப்படிச் செய்வது?
நறுக்கிய கேரட், பீன்ஸ், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்து அதையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து தேங்காய்ப்பால் சேர்க்கவும். அத்துடன் சேமியா சேர்த்து நன்கு வேகவிட்டு புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.