கிச்சன் கீர்த்தனா : மட்டன் சேமியா பிரியாணி
வழக்கமான பிரியாணியில் இருந்து மாறுபட்ட வித்தியாசமான சுவையில் இந்த மட்டன் பிரியாணி வீட்டிலுள்ளவர்களை அசத்தும்.
என்ன தேவை?
மட்டன் – 250 கிராம்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – இரண்டு
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
நெய் – சிறிதளவு
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
தயிர் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா, மல்லித்தூள் – தலா அரை டீஸ்பூன்
சேமியா – 250 கிராம்
லவங்கம் – 2
பட்டை – ஒன்று
ஏலக்காய் – 2
ஆனியன் சாஸ், டொமேட்டோ சாஸ் – தலா ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் லவங்கம், பட்டை, ஏலக்காயை அதில் போடவும். அடுத்து ஆனியன் சாஸை கலந்து பிறகு டொமேடோ சாஸையும் போட்டு கலக்கவும். சாஸ் நன்கு கொதித்த பிறகு, நறுக்கிய மட்டன், வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நீர் சுண்டிய பிறகு கொத்தமல்லி, புதினாவைச்
சேர்த்துக்கொள்ளவும். அடுத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலாவைச் சேர்த்து கலந்து, போதிய அளவு நீர் சேர்க்கவும். நீர் கொதித்ததும், சேமியாவை கலந்து குறைந்த தீயில் சமைக்கவும். மட்டன் சேமியா பிரியாணி தயார்.