இதை தெரிஞ்சிக்கோங்க..! பிப்ரவரி 1 முதல் வர இருக்கும் முக்கிய மாற்றங்கள்..!

பிப்ரவரி 1ம் தேதி முதல் பல்வேறு விஷயங்கள் மாற்றம் அடைய உள்ளன. அவை என்னென்ன விஷயங்கள் என்று இங்கே வரிசையாக பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் பிப்ரவரி 1ஆம் தேதி சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படும். விரைவில் தேர்தல் வரவிருப்பதால் அதை மனதில் வைத்து சிலிண்டர் விலை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பிப்ரவரி முதல், புதிய ரயில் அட்டவணை கொண்டு வரப்பட உள்ளது. 5,000 சரக்கு ரயில்கள் மற்றும் ஒரு சில பயணிகள் ரயில்களுக்கான கால அட்டவணையை மாற்ற உள்ளனர். பல ரயில்களின் நேரம் மாறும் வாய்ப்புகள் உள்ளன.

தேசிய பென்சன் திட்டத்தில் (NPS) மிகப் பெரிய மாற்றம் வருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேசிய பென்சன் திட்டத்தின் விதிமுறை மாற்றப்படுகிறது. பென்சன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவின் படி இனி தேசிய பென்சன் திட்ட கணக்கில் இருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை எடுக்க முடியாது.

வாடிக்கையாளர்கள் இனி IMPS முறையில் பணப் பரிவர்த்தனை செய்யும் போது இந்த விதிமுறையைக் கடைபிடித்தே ஆகவேண்டும். பிப்ரவரி 1ஆம் தேதி முதல் IMPS முறையில் பணம் அனுப்பும்போது ரூ. 5 லட்சத்துக்கு மேல் அனுப்பினால் அதற்கு பயனாளியின் பெயரை சேர்க்க வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் சமீபத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து, பல வங்கிகள் தங்கள் கடன் விகிதங்களை மாற்றியமைத்து வருகின்றன. இதன் பொருள் நீங்கள் ஒரு வங்கியில் கடன் வாங்கினால், நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும், மேலும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நேரம் அதிகரிக்கும். பட்ஜெட்டிற்கு பின் ரெப்போ விகிதம் மேலும் அதிகரிக்கப்பட்டால்.. கடன் இன்னும் அதிகரிக்கும். முக்கியமாக, உங்கள் அன்றாடச் செலவினங்களுக்காக நீங்கள் வைத்திருக்கும் பணத்தின் அளவை இது பாதிக்கலாம், இந்த மாற்றங்களைப் பற்றி அறிந்து அதற்கேற்ப உங்கள் நிதியைத் திட்டமிடுவது முக்கியம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *