இதை தெரிஞ்சிக்கோங்க..! கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 15 விஷயங்கள்..!

பொறித்த உருளைக்கிழங்கு சிப்ஸ் குடல், மார்பகம், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களை உண்டாக்கலாம்.
இதுப்போக சருமத்தில் பாதிப்பு மற்றும் தமனிகளில் அடைப்புகளும் ஏற்படும்.
வெள்ளை பிரட்
பாஸ்தாவுடன் சேர்த்த வெள்ளை பிரட் மற்றும் செறிவூட்டப்பட்ட கோதுமை மாவால் செய்யப்பட்ட எந்த ஒரு உணவானாலும் சரி, இரத்தக் கொதிப்பை அவைகள் அதிகரிக்கும். காலப்போக்கில் டைப் 2 சர்க்கரை நோய், இதய குழலிய நோய்கள் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நல்லது என நினைக்கும் விஷயமெல்லாம் கெட்டதாக உள்ளதல்லவா?
உப்பு
உப்பு அல்லது சோடியம், இதய நோய்கள் மற்றும் வாதம் ஏற்படும் இடர்பாட்டை அதிகரிக்கும் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே. உலகத்தில் உள்ள மற்ற பகுதிகளை விட இந்தியாவில் சராசாரிக்கும் அதிகமான அளவில் உப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி நாம் கூடுதலாக பயன்படுத்தும் உப்பினால், அந்த உணவே நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி வருகிறது.
கைப்பேசிகள்
கைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய கால கட்டத்தில், ரேடியோ அதிர்வெண்களில் கதிரியக்க மாசுக்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறியுள்ளன. இது சில வகையான புற்றுநோய்களை உண்டாக்கும். அதனால் கைப்பேசிகளை எப்போதும் பேண்ட் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்கவும். வேண்டுமானால் கைப்பேசிக்கு கதிர்வீச்சு தடுப்பை வாங்கவும். இருப்பினும் இதன் திறனைப் பற்றி விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் உள்ள கசப்புத் தன்மைக்கு காரணம் அதிலுள்ள குகுர்பிடசின்ஸ் எனப்படும் நச்சுப் பொருளாகும். வெள்ளரிக்காயின் இரு பக்க நுனிகளை வெட்டுவதால், வெள்ளரிக்காயின் மற்ற பகுதி குகுர்பிடசின்ஸால் விஷமாக்கப்படுவது குறையும். அதை அப்படியே சாப்பிடுவதால் அனைத்து வகையான வயிற்று புழுக்கள் மற்றும் சுகவீனங்களும் ஏற்படும்.