இதை தெரிஞ்சிக்கோங்க..! கலர் கத்திரிக்காயில் எதை சாப்பிடலாம்? எது சாப்பிடக்கூடாது?

ம்மில் நிறைய பேருக்கு கத்திரைிக்காய் பிடிக்காது. குறிப்பாக இளைஞர்களும் குழந்தைகளும் கத்தரிக்காயை கண்டாலே காத தூரம் ஓடும்.

ஆனால் நம் வீட்டில் உளள பெரியவர்கள் கத்தரிக்காயை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

ஏனென்றால் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் இருப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நாம் உணர்வதில்லை.

கத்தரிக்காயின் பூர்வீகம் எது தெரியுமா? நம்முடைய இந்தியா தானாம். இதில் மிகக் குறைந்த கலோரியே இருக்கிறது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிக ஏற்ற காய்களில் ஒன்று கத்தரிக்காய். 100 கிராம் கத்தரிக்காயில் வெறும் 24 கலோரிகள் மட்டுமே உண்டு.

கத்தரிக்காய் நிறங்கள்:

ஒவ்வொரு காயும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். பின்பு மரபணு மாற்றம் அதிகரித்த நிலையில் ஒரு காயின் நிறத்தைக் கூட மாற்ற முடிந்தது. ஆனால் கத்தரிக்காய் இயற்கையிலேயே பல நிறங்களைக் கொண்டது. கத்திரிக்காயின் நிறங்கள் என்பது பஞ்சபூத சேர்க்கையால் உருவாகிறது என்று சொல்வார்கள்.

#நீலநிறக் கத்தரிக்காய்:

கத்தரிக்காய் செடி பூத்துக் காய்க்கத் தொடங்கும்போது சூரிய ஒளியில் உள்ள நீல நிறத்தையும் பூமியில் உள்ள இரும்புச் சத்தையும் கிரகித்துக் கொள்ளுமாம். அதனால் தான் கோயின் தோல் இருண்டு நீலமாகவும் உள்ளே வெள்ளையாகவும் இருக்கிறதாம். பொதுவாக நீல நிறக் கத்தரிக்காய்கள் கல்லீரல் நோய்கள், உடலில் ஏற்படும் ரத்தக் குறைபாடு, உடல் சோர்வு மற்றும் மந்தத் தன்மையைப் போக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

#வெள்ளை கத்தரி:

வெள்ளை கத்தரிக்காய் சூரியனில் உள்ள ஏழு வகை நிறங்களையும் கிரகித்துக் கொள்ளுமாம். ஆனாலும் இந்த வெள்ளை நிறக் காயில் பஞ்சபூதத்தில் நெருப்பின் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த கலர் கத்தரி பித்தத்தைச் சரியாகத் தூண்டிவிடும். மலமிளக்கியாகச் செயல்படும். கல்லீரலின் செயல்பாடுகளுக்கு வெள்ளை நிறக் கத்தரிக்காய் மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகளுக்கு அதிகமாகக் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவர்களுக்கு அஜீரணக் கோளாறை உண்டாக்கும்.

#வெளிர் பச்சை கத்தரிக்காய்:

வெளிர் பச்சை நிறக் கத்தரிக்காயும் வெள்ளை நிறக் காயைப் போலத் தான் பலன்கள் கொண்டது. கல்லீரல் வீக்கத்தை சரிசெய்யும். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது நம்முடைய உடலில் பஞ்ச பூதங்களின் எந்த ஆற்றல் குறைவாக இருக்கிறதோ அதைக் கண்டறிந்து அதற்கேற்ற நிற காய்கறிகளைச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆயுள் நீடிக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *