இதை தெரிஞ்சிக்கோங்க..! அம்மன் கோவில்களில் சூலத்தில் எலுமிச்சை சொருகி வழிபடுவது ஏன்?

லுமிச்சம் பழம் இறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி, தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக மிக முக்கியமானது.

சிவபெருமானின் கனி என்றும் எலுமிச்சம்பழம் அழைக்கப்படுகிறது.

சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதற்கு காரணம், எலுமிச்சை தேவ கனி என்று அழைக்கப்படுவதால் தான். ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை ஆகும். இதனை வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால் ஆயுதங்கள் அது எதுவானாலும் ரத்தம் கேட்கும்.

எனில் சூலமும் ஒரு ஆயுதம்தான். அம்மன் கோவில்களில் அந்த ஆயுதத்தால் எந்த ஒரு பலியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு எலுமிச்சை பழத்தை பலியாக சூலத்தில் சொருகி வைக்கும் வழக்கம் சோழர் காலம் முதற்கொண்டு வழிவழியாக இருந்து வருகிறது.

அது இன்றும் கோவில்களில் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது எலுமிச்சை பழத்தில் வெளித்தோற்றம் தோல் என்றும், அதற்குள் இருக்கும் பழம் நிறைந்த பாகம் மாமிசம் என்றும், அதில் உள்ள சாறு ரத்தமாகவும் பாவிக்கப்படுகிறது. எல்லா அம்மன் கோவில்களிலும் கோழி போன்ற அசைவ பழியை தர இயலாது.

அந்த இடத்தில் எலுமிச்சை பழம் பலி செலுத்த உகந்த பழமாக கருதப்படுகிறது. இதனால் கோவிலின் சாகித்யம் காக்கப்படுகிறது. இதோடு அம்மனின் கோபம் தணிகிறது. எலுமிச்சையின் வாசனையால் அம்மன் சாந்த சொரூபிணியாக காட்சியளிக்கிறாள் என்று சக்தி புராணம் கூறுகிறது.

அன்னையின் அருள் பெற,
“ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே” என்ற இந்த மந்திரத்தை சொல்லி எலுமிச்சை பழத்தை சூலத்தில் குத்தினால் அம்மன் அருள் திருவருளால் கிடைக்கும். இதனை தொடர்ந்து செய்யும் பொழுது ராகு தோஷம் விலகும்.

இதில்,
“ஐம்” என்ற சொல் சரஸ்வதியையும்,
“ஹ்ரீம்” என்ற சொல் லட்சுமியையும்,
“க்லீம்” என்ற சொல் காளியையும்
குறிக்கும்…..

சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என்று பொருள். இந்த மந்திரத்தைச் சொல்லி எலுமிச்சையை சூலத்தில் குத்த முப்பெரும் தேவியரின் அருள் கிடைக்கும்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *