இதை தெரிஞ்சிக்கோங்க..! வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம் டிப்ஸ் இதோ..!

ஒரு டம்பளர் நீரை நன்கு கொதிக்க வைத்து பின் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, குடிக்கும் பதத்திற்கு நீரை ஆற்றி கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பதன் மூலம் வயிற்று வலி குறையும்.

முருங்கை இலையில் இருந்து சாறு பிழிந்து அதோடு 50கிராம் நற்சீரகம் சேர்த்து நன்கு அரைத்து குடித்தால் வயிற்று வலி பறந்தோடும்.

வயிற்று வலிக்கு நிவாரம் பெற புதினா இலை பயன்படுகிறது. இந்த புதினா இலையில் உள்ள மெந்தோல் வயிற்றில் உள்ள அஜீரண பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. மேலும் இது குடலில் உள்ள தசைப் பிடிப்பை குறைக்கவும், வலியைப் போக்கவும் உதவுகிறது. புதினா இலைகளைப் பச்சையாகவும் உண்ணலாம் அல்லது சமைத்த உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா இலை, ஏலக்காய் போன்றவை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து தேனீர் தயாரித்து அருந்தலாம் அல்லது மற்ற பானங்களுடன் சேர்த்து அருந்தலாம். இவ்வாறு செய்வதினால் வயிற்று வலி குணாகும்.

உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்து வந்தால் தீராத வயிற்று எரிச்சல் குணமாகும்.

சீரகம் ஓமம் ஆகிய இரண்டையும் தலா 100 கிராம் எடுத்துக்கொண்டு அதை வறுத்து பின் அதோடு 100 கிராம் கற்கண்டு சேர்த்து மூன்று வேலையும் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்.

வெந்தயத்தை நெய்யோடு சேர்த்து நன்கு வறுத்து பொடி செய்து பின் அதை மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி பறந்தோடும்.

வயிற்று வலி பிரச்சனைக்கு மிக சிறந்த தீர்வளிக்கக்கூடிய ஒன்று தான் நீராகாரம். அதாவது சாதம் மித்த பிறகு அவற்றில் தண்ணீர் ஊற்று வைப்போம் அல்லவா அதனைத்தான் நீராகாரம் என்று சொல்வார்கள். இந்த நீராகாரத்தை ஒரு டம்ளர் எடுத்துக்கொள்ளுங்கள் பின் அவற்றில் சிறிதளவு உப்பு மற்றும் பெருங்காயம் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.பின் வயிற்று வலி உள்ளவர்களுக்கு இந்த நீரினை கொடுத்து அருந்தச்சொல்லலாம். இவ்வாறு அருந்துவதினால் வயிறு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

கற்றாழை மிகவும் குளிர்ச்சி வாய்ந்த பொருள். பெண்கள் இதனை அழகு சாதன பொருளாக பயன்படுத்துவார்கள். உடல் சூட்டினை தணிக்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த கற்றாழையை ஜூஸ் செய்து சாப்பிடலாம். இவ்வாறு அருந்துவதினால் உடல் உஷ்ணம் தணிந்து உஷ்ணத்தினால் ஏற்பட வயிற்று வலியை குணப்படுத்தும்.

வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை ஜூஸை கலந்து பருகினால் வயிற்று வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். அரை எலுமிச்சை பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிழிந்து, அதனை நன்றாக கலந்து, பின் குடிக்கவும்.

வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெற விரும்பினால் சீரகம் சிறந்த தீர்வாக அமையும். சீரகத்தில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் வாயு பெருக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் காய்ந்த தேங்காய் இரண்டு போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை மூன்றையும் நன்றாக கலந்து ஒரே நேரத்தில் வாயில் போட்டு விழுங்கவும். இது வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தை உடனடியாக குறைக்க உதவுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *